‘சாலையோரம் சடலமாகக் கிடைத்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘தனியாகச் சென்றபோது’.. ‘மர்ம நபர்களால் நடந்த பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல்லில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த தம்பதி தினேஷ்குமார் (25) - சுஷ்மிதா (20). நிறைமாத கர்ப்பிணியான சுஷ்மிதா இன்று காலை உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய கணவர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் கவுண்டச்சிபட்டி சாலையோரம் சுஷ்மிதா சடலமாக போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளார். பின்னர் பரிசோதித்ததில் அவருடைய வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ள நிலையில், சம்பவ இடத்திலிருந்து அவருடைய செல்ஃபோன் மற்றும் பை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுஷ்மிதா தனியாக வந்ததைப் பார்த்து மர்ம நபர்கள் அவரிடம் நகையைப் பறிக்க முயற்சித்திருக்கலாம் எனவும், அப்போது அவர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சுஷ்மிதாவின் கணவர் தினேஷ்குமாருக்கு யாருடனாவது முன்விரோதம் உள்ளதா? அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தனியாக நடந்த சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த மர்மநபர்கள்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!
- ‘ஒரு வயதே ஆன குழந்தைக்கு’.. ‘பாலில் குருணை கலந்துகொடுத்து’.. ‘பாட்டி செய்த அதிரவைக்கும் காரியம்’..
- ‘பிரசவத்தின்போது நடிகைக்கு நேர்ந்த பயங்கரம்’.. ‘சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காத அவலம்’..
- ‘குட்டையில் சடலமாக மிதந்த இளம்பெண்’.. ‘அருகே சிதறிக் கிடந்த துணி, சாக்லேட்’.. ‘தகாத உறவால் நடந்த விபரீதம்’..
- 'பேருந்து நிலையத்தில்'... 'நள்ளிரவில் பெண் செய்த காரியத்தால்'... 'அதிர்ந்துபோன பொதுமக்கள்'!
- 'அந்த கொலைய பாத்ததானல தீபாவளிக்கு என்ன கொல்ல ஸ்கெட்ச் போட்ருக்காங்க'.. 'எனக்கு 2 கொழந்தைங்க'.. கதறும் ஓவியர்!
- 'வீடு திரும்பாத ஆட்டோ ஓட்டுநர்'... 'கணவன், மனைவியால்’... ‘நடந்த அதிர்ச்சி சம்பவம்'!
- ‘பிறந்ததும் பால் கொடுத்துவிட்டு, துணியால் இறுக்கி’.. ‘பையில் இறந்த குழந்தையுடன் சுற்றிய’.. ‘இளம்பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம்’
- '2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை'.. அலறித்துடித்த பெற்றோர்!.. 'பதற வைக்கும்' வீடியோ!
- 'Freshers Day' கொண்டாட்டம்.. ‘ராம்ப் வாக்’ சென்ற மாணவி..! ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்..! சோகத்தில் மூழ்கிய கல்லூரி..!