வளைகாப்பு நடந்த அடுத்த நாளே இப்படியா நடக்கணும்.. நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வளைகாப்புக்கு மறுநாள் நிறைமாத கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சின்னத்திருப்பதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் ஜங்ஷன் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தமிழரசி (வயது 32). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் தமிழரசி சில மாதங்ளுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் ராஜேஷின் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து இரவு 11 மணியளவில் கர்ப்பிணியான தமிழரசிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனே அவரை குடும்பத்தினர் அருகில் உள்ல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய மறுநாளே அவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ராத்திரியும் அங்க தான் இருக்காரு.." கண்டித்த மனைவி.. கண்டுக்காத கணவன்.. நடந்த விபரீதம்
- என மனைவி செம போதை.. ஃபுல் மப்புல சொன்ன விஷயம்.. உச்சக்கட்ட வெறியான கணவன்.. அதிர வைக்கும் வாக்குமூலம்
- பணியாரம் வாங்கிட்டு வந்துருக்கேன்.. கொஞ்ச நேரத்துல மனைவி இறந்துவிட்டதாக சொன்ன கணவன்.. என்ன நடந்தது?
- கர்ப்பிணி மனைவியை காணவில்லை.. புகாரளித்த கணவர்.. போன் சிக்னல் கோயம்பத்தூர்'ல இருக்கு.. கிளைமேக்சில் செம ட்விஸ்ட்
- ‘என் புருஷன் குடிச்சு இறந்துட்டாரு’.. எல்லாரையும் நம்ப வைத்த மனைவி.. காதலன் சிக்கியதும் க்ளைமாக்ஸில் பரபரப்பு ட்விஸ்ட்..!
- சேலம் அருகே பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு?.. பயந்து ஓடிய மக்கள்.. உண்மை என்ன..? அதிகாரிகள் விளக்கம்..!
- விருந்துக்கு அழைத்து.. வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்..! சேலத்தில் பரபரப்பு..!
- சிறுத்தை புலி நடமாட்டம்? ‘கிராம மக்கள் யாரும் வெளிய வர வேண்டாம்’.. வனத்துறை அறிவுறுத்தல்..!
- அண்ணியுடன் ஏற்காடு போன கொழுந்தனார்.. லாட்ஜ் பாத்ரூமில் நடந்த விபரீதம்
- நள்ளிரவு ‘முகமூடி’ அணிந்து வந்த மர்ம நபர்கள்.. சிசிடிவி-ல் பதிவான காட்சி.. அச்சத்தில் வியாபாரிகள்..!