"'எலெக்சன்'ல அவங்க எப்படியாச்சும் ஜெயிக்கணும் ஆண்டவா..." அமெரிக்க தேர்தலுக்காக மன்னார்குடியில் நடந்த 'வழிபாடு'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மிகவும் எதிர்பார்ப்புடன் உலகமே எதிர் நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். மன்னார்குடியை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற அங்குள்ள அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் கமலா ஹாரிஸ் குடும்பத்தினரின் குலதெய்வ கோவிலில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது அங்கு இட்லி, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.

மேலும், கிராமம் முழுவதும் விளம்பர பதாகைகளை வைத்து அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்