அடிக்கடி ஏற்படும் ‘மின்தடை’.. தயவுசெஞ்சு யாரும் ‘இத’ பண்ணாதீங்க.. பொதுமக்களிடம் மின்வாரியம் வேண்டுகோள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளன. இதனால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் அவர்கள் பொழுதுபோக்கிற்காக பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

இதில் ஒரு சிலர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பட்டம் பறக்க விடுகின்றனர். இவ்வாறு பறக்கவிடும் பட்டத்தின் நூல் அறுந்து மின் கம்பிகளில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும், அதனை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜெ.அ.ஞானேஸ்வரன், பொதுமக்கள் அவர்களின் வீட்டு மொட்டை மாடி, உயரமான கட்டிடங்களில் இருந்து பட்டம் விடும்போது ஒரு சில பட்டம் அறுந்து அவற்றின் நூல் மின்கம்பியில் விழுவதால் ஷாட் சர்க்யூட் ஏற்படுகிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு தொடர்பான அறிவுறைகளை வழங்கி பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்