மதுரையில் பரதநாட்டியம் ஆடும்போதே மரணம் அடைந்த கலைஞர்.. மேடையிலேயே பிரிந்த உயிர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் பரத நாட்டியம் ஆடிக்கொண்டு இருந்தபோதே கலைஞர் ஒருவர் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertising
>
Advertising

பூச்சொரிதல் விழா

தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் உள்ள வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா வெகு விமர்சியாக நடைபெறும். அப்போது தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டும், பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் களைகட்டியது பூச்சொரிதல் விழா. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பரத நாட்டியம்

இந்த திருவிழாவை முன்னிட்டு பிரபல பரத நாட்டிய கலைஞரான காளிதாஸ் அவர்களின் சீடர்களின் பரதநாட்டிய விழா  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனது சீடர்களுடன் இணைந்து காளிதாஸ் நடனமாடினார். இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இடையே, திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு காளிதாஸ் உட்கார, என்ன நடக்கிறது என்பது தெரியாமல் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நெஞ்சு வலியால் சரிந்த காளிதாஸ், மேடையிலேயே மரணம் அடைந்துவிட்டார் என்பது தெரிய வந்ததும் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கலை குடும்பம்

பிரபல பரத நாட்டிய கலைஞரான காளிதாஸ் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 54 வயதான காளிதாஸ் மதுரையில் பரத நாட்டிய பள்ளி ஒன்றினை நடத்திவந்தார். இவருடைய மகன் மிருதங்க வித்துவான் ஆவார். தந்தையை போலவே இவரது மகளும் பரத கலைஞர். இவருடைய மனைவி கர்நாடக சங்கீத ஆசிரியராக இருக்கிறார். கலைக்காக உழைத்துவரும் இந்த குடும்பத்தில் தற்போது நிகழ்ந்திருக்கும் இந்த சோகம் அனைவரையும் கலங்க வைத்திருக்கிறது.

’ஆடல் வல்லான்’ என்ற விருது, ’கெளரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை நிகழ்த்திய காளிதாஸ், தான் பெரிதும் மதித்த பரதநாட்டிய நடனம் ஆடும் போதே உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

MADURAI, BHARATHANATTIYAM, DANCER, KALIDAS, மதுரை, பரதநாட்டியம், காளிதாஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்