Video : "லுங்கி கூட கட்டிருக்கேன்.. ஃபியூச்சர்லதான் புடவ.." - வெக்கப்பட்ட ‘பொண்ணு-ணா நானு’ Viral Girl நிஷா Exclusive

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இணையத்தில் சாதாரண மனிதர்கள் தங்களுக்கே உரிய எதார்த்த வாழ்வினால் வைரலாகிவிடுகின்றனர். இணையத்தின் வழியே மக்கள் உலகளாவிய மக்களை தெரிந்துகொள்கின்றனர். அவர்கள் எவ்வளவு எளியவர்களாக இருந்தாலும், அவர்களின் இயல்பான கேரக்டருக்காகவும், எதார்த்தமான வாழ்க்கைக்காகவும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படவும் செய்கின்றனர். அதற்கான வாய்ப்பினை டிஜிட்டல் யுகம் வழங்குகிறது.

Advertising
>
Advertising

Also Read | Lakshmi Vasudevan : “ரூ.5 லட்சம் பரிசு..”.. தவறான லிங்க்.. டவுன்லோடு ஆன ஆப்.. என்ன செய்யக்கூடாது.? பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை எச்சரிக்கை..

அந்த வகையில் சமீபத்தில் நிஷா எனும் சிறுமி, பார்ப்பதற்கு சிறுவன் மாதிரியே நடை, உடை, குரல் என்றிருந்ததால் வைரலானார். க்யூட் சிரிப்புக்கும் துடுப்பான பேச்சுக்கும் சொந்தக் காரரான நிஷா அனைவருக்குமே செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். வைரலாகிவிட்ட இவரது வாழ்வியல் குறித்த பிரத்தியேக நேர்காணலை பிஹைண்ட்வுட்ஸ் செய்திருந்தது.

அப்போது நிஷாவை பற்றி அவரது அம்மா பேசும்போது, “சிறு வயதில் இருந்தே ஆண் பிள்ளைகளின் ஆடையை போலவே தான் அணிவார். அவருக்கு வாங்கிய பெண் பிள்ளைகள் டிரெஸ் வேஸ்ட் ஆகிவிடும். மற்ற ஆடைகளையும் நாங்கள் எடுத்துவந்தால் அவருக்கு பிடிக்காது, கடைக்கு போய் அவரே எடுத்துக்கொண்டு நேராக பில் கவுண்ட்டருக்கு போய் விடுவார். அவர் சொல்லும் பில்லை நாங்கள் கட்டவேண்டும்., இல்லையென்றால் கோபித்துக் கொள்வார். வளர வளர மாறிவிடுவார். ஆனால் அவருக்கு பிடித்தாற்போல் வாங்கித்தருவதே எங்கள் சந்தோஷம். எவ்வித மேக்கப்பும் போடமாட்டார். பவுடர் கூட அடிக்க மாட்டார். கண்ணுக்கு மை போடுவார்.” 

தொடர்ந்து 9வது படிக்கும் நிஷாவின் பள்ளி, நண்பர்கள் உள்ளிட்ட சூழலில் பார்க்க ஆண் போலவே தோற்றமளிக்கும் நிஷாவை எப்படி அணுகுகிறார்கள் என்பது குறித்து நிஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிஷா,  “சின்ன வயசுல இருந்தே நான் இப்படித்தான். பெருசானா மாறிக்குவேன். டிரெஸ்ஸும் அப்படித்தான். நமக்கு பிடிச்சமாதிரிதான் நாம இருக்க முடியும். யார் சொன்னாலும் நான் கேக்க மாட்டேன். எங்க அப்பா அம்மா சொல்றதையே கேக்க மாட்டேங்கும்போது, நான் ஏன் மத்தவங்க சொல்றத பத்தி கவலப்படணும்.

செக்டு ஷர்ட் போடுவேன், லுங்கி கூட கட்டிருக்கேன். அடுத்து வளர வளர பெண் பிள்ளைகள் டி ஷர்ட், ஜீன்ஸ் என அணிந்து அதன் பின்னர் சுடிதார், கடைசியா புடவை கட்டிக்கலாம்னு இருக்கேன். ஏற்கனவே கட்டியிருக்கேன்.” என கலகலப்பாக பேசும் நிஷா, பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களுமே தன்னை பையன் என நினைத்ததால் அவ்வப்போது பல குட்டி குட்டி சுவாரஸ்யங்கள் நடக்கும் என்றும் ஆனால் யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் பேசும் தன் தாயாரும் குடும்பமும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் கூறி புன்னைக்கிறார்.

Also Read | "திரும்பவும் நடிக்க வைப்பேன்" - உதவிய VJS, சூரி, விஷ்ணு விஷால் .. ஹரி வைரவன் மனைவி உருக்கம்.! Exclusive

PONNUNA NAANU, TOM BOY NISHA, VIRAL BOY GIRL, VIRLA GIRL NISHA

மற்ற செய்திகள்