பொங்கல் விடுமுறைக்கு சிறப்புப் பேருந்துகள் இருக்கா?- தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கல் பண்டிகைக்காக சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக சென்னையில் இருந்து பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பண்டிகை காலத்தில் பயணம் செய்வார்கள். இதனால் அதிகப்படியான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த சூழலில் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இந்த சூழலில் வருகிற ஜனவரி 9-ம் தேதி மற்றும் 16-ம் தேதிக்கான பேருந்துகள் முன்பதிவு நிறுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை 11-01-2022 முதல் 13-01-2022 வரையில் சென்னையில் இருந்து சுமார் 10,300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பிற மாவட்டங்களில் இருந்து 6,468 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க இனி இதை செஞ்சே ஆகணும்.. தெற்கு ரயில்வே அதிரடி
- கடுமையாகும் இரவு நேர ஊரடங்கு... சென்னையில் குவிக்கப்பட்ட 10 ஆயிரம் போலீஸார்..!
- இந்தப் பொங்கலைக் கொண்டாட உங்களுக்கு இருக்கும் இரண்டே வாய்ப்பு இவை மட்டும் தான்..!
- பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு நிறுத்தம்? வெளியூர்களுக்கு செல்ல இயலுமா?
- திணுசு திணுசா கடத்துறாங்கப்பா... சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட அரியவகை உயிரினங்கள்..!
- பொங்கலுக்கு மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? அமைச்சர் தெளிவான விளக்கம்
- சென்னை ஃபாக்ஸ்கான் போராட்ட பின்னணியில் சீனா? தமிழ்நாட்டுக்கு குறியா?
- காதலியுடன் கடைசி நிமிடங்கள்.. உருக்கமான கடிதம்.. இறுதியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு
- ஈசிஆரில் இனி ஈஸியாக போகலாம்.. சென்னையில் ரெடியாகும் அதிரடி பிளான்
- வருடத்திற்கு 28 லட்சம் சம்பளம் வாங்கிய வங்கி ஊழியர்.. ஆன்லைன் ரம்மியால் சிதைந்த குடும்பம்.. என்ன நடந்தது?