பொங்கல் முடிஞ்சு சொந்த ஊர்ல இருந்து சென்னை வர திட்டமிடுறீங்களா?... உங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொங்கல் பண்டிகையை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப ப்ளான் வச்சிருக்கீங்களா? பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை இயங்காது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் முடிஞ்சு சொந்த ஊர்ல இருந்து சென்னை வர திட்டமிடுறீங்களா?... உங்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Advertising
>
Advertising

பொங்கல் பண்டிகைக்காக சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக சென்னையில் இருந்து பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பண்டிகை காலத்தில் பயணம் செய்வார்கள். இதனால் அதிகப்படியான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

pongal special buses are cancelled due to sunday lockdown

இந்த சூழலில் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இந்த சூழலில் வருகிற ஜனவரி 9-ம் தேதி மற்றும் 16-ம் தேதிக்கான பேருந்துகள் முன்பதிவு நிறுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில் திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை 11-01-2022 முதல் 13-01-2022 வரையில் சென்னையில் இருந்து சுமார் 10,300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பிற மாவட்டங்களில் இருந்து 6,468 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு காரணமாக எந்தப் பேருந்தும் இயங்காது. வெளியூரில் இருந்து சென்னை திரும்ப நினைப்பவர்கள் திங்கள் கிழமை தான் பயணம் செய்ய முடியும். முன்னதாகவே 16-ம் தேதிக்கான பேருந்தை நீங்கள் முன் பதிவு செய்திருந்தால் உங்களுக்கான பணம் திருப்பிச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MKSTALIN, பொங்கல், சிறப்புப்பேருந்துகள், பொங்கல் வெளியூர் பயணம், PONGAL, PONGAL SPECIAL BUSES, CHENNAI KOYAMBEDU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்