பொங்கல் விடுமுறைக்கான சிறப்பு ரயில்... எங்கெல்லாம் இயக்கப்படுகிறது?... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் செவ்வாய்கிழமை முதல் 3 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை போன்ற வெளி நகரங்களில் தங்கியிருக்கும் மக்கள் பொங்கலை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்வார்கள். இதனை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
நெல்லை-தாம்பரம்:
நெல்லையில் இருந்து ஜனவரி 11-ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06002) , மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
தாம்பரம்-நெல்லை:
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ம் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82603), மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும். அங்கிருந்து ஜனவரி 18-ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82604) , மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்து சேரும்.
நாகா்கோவில்-தாம்பரம்:
நாகா்கோவிலிலிருந்து ஜனவரி 19-ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82606), மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் வந்துசேரும்.
தாம்பரம்-நாகா்கோவில்:
தாம்பரத்திலிருந்து ஜனவரி 20-ம் தேதி முற்பகல் 11.20 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06075), மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.
திருச்சி-சென்னை:
திருச்சியில் இருந்து ஜனவரி 11-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06026), அதேநாள் இரவு 8.15 மணிக்கு சென்னை எழும்பூா் வந்து சேரும்.
எனினும் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதில் கோவை, திருப்பூர் தவிர்க்கப்பட்டுள்ளதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சென்னையில் வசிக்கும் அளவு தென்மாவட்டத்தினர் திருப்பூரிலும் உள்ளனர். கோவையில் இருந்து ரயில் இயக்காமல், கேரளா மாநிலத்தின் கொல்லம், எர்ணாகுளத்தில் இருந்தே ரயில் பயணத்தை துவக்குவது வாடிக்கையாகி விட்டதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆபத்தை’ உணராமல் காதுகளில் ‘ஹெட்போன்’... ஒரு நொடி ‘கவனக்குறைவால்’ இளம்பெண்ணுக்கு நேர்ந்த ‘துயரம்’...
- ஜல்லிக்கட்டு: காளையை அடக்கும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு... இவங்களுக்கு எல்லாம் அனுமதி இல்ல!
- “பொங்கல் நெருங்கிடுச்சே?”.. “சென்னையில் இருந்து 4,950 சிறப்பு பேருந்துகள்!”.. “சிறப்பு ரயில்கள் பற்றிய விபரங்கள் உள்ளே!”
- ‘இது என்ன வித்தியாசமா இருக்கு’!.. பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்த இளைஞர்’.. நொடியில் நடந்த பயங்கரம்..!
- VIDEO: ‘தலைக்கு தில்லப் பாத்தயா’!.. 'எருமை மாட்டுடன் எலெக்ட்ரிக் ட்ரெயினில் பயணம்'.. வைரலாகும் வீடியோ..!
- ‘பட்டாசு வெடிச்சதுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம்’ .. பண்டிகை நாளில் தமிழருக்கு வந்த சோதனை!
- 'சென்னையின்' முக்கிய வழித்தடங்களில்... 'மின்சார' ரெயில் சேவை ரத்து... விவரம் உள்ளே!
- குற்றவாளிகள் இனி தப்ப முடியாது... எக்ஸ்பிரஸ் ட்ரெயினில்... அறிமுகமாகும் புதிய வசதி... விவரம் உள்ளே!
- ரயில் நிற்பதற்குள் 'பிளாட்ஃபார்மில்' காலை வைத்து இறங்க முயன்ற 'பெண்'.. நொடியில் நேர்ந்த சோகம்!
- இந்தி புக் உடன்... செல்ஃபி எடுத்து அனுப்புங்க... பரிசு காத்திருக்கு... மதுரையில் ஊழியர்களுக்கு புதிய திட்டம்!