ஒன்றல்ல.. இரண்டு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு ‘மகிழ்ச்சியான’ அறிவிப்பு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்தி முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் அகவிலைப்படி பெற தகுதியுள்ள ஏழை பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி வழங்கிடவும் அரசின் சி டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 01.01.2022 முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 01.01.2022 முதல்  17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட இன்று (28-12-2021) முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு தோராயமாக 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். மேலும், பொங்கல் பரிசாக ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக 1,000 ரூபாயும், முன்னாள் கிராம நி்ர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MKSTALIN, PONGALBONUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்