‘திருமணமான 6 மாதத்தில்’.. ‘கணவனும் கர்ப்பிணி மனைவியும்’.. ‘எடுத்த சோக முடிவு’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் திருமணமான 6 மாதத்தில் கணவனும், கர்ப்பிணி மனைவியும் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த சிவா - விஜயலட்சுமி தம்பதிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. விஜயலட்சுமி கர்ப்பமாக இருந்த நிலையில் அவர்களுடைய வீட்டிலிருந்து இன்று திடீரென புகை வந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்துள்ளனர். மேலும் சமையல் எரிவாயு திறக்கப்பட்டு வீடு முழுவதும் எரிவாயு பரவி இருந்துள்ளது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்துள்ளனர்.
கணவன், மனைவி இருவருக்கும் லேசான காயம் இருந்த நிலையில் விஜயலட்சுமியின் கழுத்தில் பெரிய துப்பட்டா ஒன்று சுற்றியிருந்துள்ளது. இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு இருவருக்கும் இடையே அவர்களுடைய பழச்சாறு கடைக்கு பூஜை போடுவதில் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விஜயலட்சுமி அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம், அதைப் பார்த்த சிவா அவரது உடலை கீழே இறக்கிவிட்டு சமையல் எரிவாயுவை திறந்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘செல்ஃபி மோகத்தால்’.. ‘புதுமணப்பெண் உட்பட 4 பேருக்கு நடந்த பரிதாபம்’..
- ‘2 குழந்தைகளுடன் கணவர் அனுப்பிய புகைப்படம்’.. ‘பதறியடித்து ஓடிவந்த மனைவி’.. ‘அதற்குள் நடந்துமுடிந்த விபரீதம்’..
- ‘மனைவியின் காதலன் மீது’.. ‘வழக்குத் தொடர்ந்த கணவருக்கு’.. ‘ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு’..
- ‘நான் சொல்லிதான் அவரு செஞ்சாரு’.. ‘கணவர் கொலை வழக்கில்’.. ‘சரணடைந்துள்ள மனைவி வாக்குமூலம்’..
- ‘இந்தாங்க வீட்டுச் சாவி’... ‘கணவரின் காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ந்துபோய் நின்ற போலீசார்’!
- கர்ப்பமான மனைவிக்கு வேறலெவல் சர்ப்ரைஸ் கொடுத்த கணவன்..! வைரல் போட்டோ..!
- 'கர்ப்பிணி' மனைவிக்கும் தனக்கும்..ஒரே அப்பாவா?..'அதிர்ந்து' போன வாலிபர்!
- 'தன்பாலின சேர்க்கைக்கு அழைத்தாரா?'..'ஆவேசமாக வந்து நின்ற 2வது மனைவி!'... 'ஆட்டோ மோகன்ராஜ்' வழக்கில் பரபரப்பு திருப்பம்!
- ‘3 நாட்கள் அடைத்து வைத்து’.. ‘வேலை இடத்தில்’.. ‘தம்பதிக்கு நேர்ந்த அவலம்’..
- ‘சாரி அம்மா.. நான் எந்தப் பொண்ணையும் காதலிக்கல’.. ‘கடிதம் எழுதிவிட்டு மாணவர் எடுத்த விபரீத முடிவு’..