‘கார் ஏசி வெடித்து பயங்கர விபத்து’.. ‘திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில்’ .. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் கார் ஏசி வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி உழந்தைகீரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (32). கார் ஓட்டுநரான இவர் இன்று காலை காரை எடுத்தபோது திடீரென அதிலிருந்து புகை வந்துள்ளது. பின்னர் நொடியில் கார் ஏசி பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் முத்துக்குமரன் உடலில் தீப்பற்றியுள்ளது.
இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக காரின் கண்ணாடியை உடைத்து அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் தீ வேகமாகப் பரவியதில் முத்துக்குமரன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை போலீஸார் அவருடைய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் கார் ஏசியில் கேஸ் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த முத்துக்குமரனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்ததும் தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நிக்க மாட்டீங்க?'.. 'காவலர் தூக்கி வீசிய லத்தி!'.. 'பைக் டயரில் சிக்கி'.. 'இளைஞர்களுக்கு' நடந்த 'விபரீதம்'!
- ‘விபரீதத்தில் முடிந்த பந்தயம்’.. ‘மதுவுடன் தொடர்ந்து முட்டைகளை சாப்பிட்டவருக்கு நேர்ந்த சோகம்’..
- ‘தடுமாறி விழுந்த இளம்பெண்’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் வீடியோ’..
- ‘காதல் கணவருக்கு நடந்த பயங்கரம்’.. ‘துக்கம் தாங்க முடியாமல்’.. ‘சென்னை அருகே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு’..
- ‘சென்னையில் வாகன சோதனையின்போது’.. ‘விபத்தில் சிக்கிய இளம்பெண்’.. ‘வீடு திரும்பிய பின் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘தூக்க கலக்கம்’... ‘லாரி மீது மோதிய அரசுப் பேருந்து’... ‘அலறிய பயணிகள்’... '15 பேருக்கு நேர்ந்த சோகம்'!
- ‘சென்னையிலிருந்து கோவைக்கு’... 'காரில் திரும்பியபோது'... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'!
- ‘நடுரோட்டில் தீடிரென தீப்பிடித்து’... ‘எரிந்த சொகுசு கார்’... 'பதறிப்போன டிரைவர்'!
- ‘பெற்றோர் அலட்சியத்தால்’.. ‘வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த’.. ‘3 வயது பெண் குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..
- ‘வயோதிகம்’... ‘உடல்நலம் குன்றிய மகன்’... 'தந்தை எடுத்த விபரீத முடிவு'!