‘பரீட்சை சரியா எழுதலன்னு திட்டிய ஆசிரியர்’.. கோபத்தில் ஆசிரியர்கள் முன் கல்லூரி மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேர்வு ஒழுங்காக எழுதவில்லை என ஆசிரியர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் இந்திரா நகரைச் சேர்ந்த பிரேம்குமார் (20) என்ற மாணவர் இக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்லூரியில் சுழற்சி தேர்வு நடைபெற்றுள்ளது. அதில் மாணவர் பிரேம்குமார் சரியாக எழுதவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆசிரியர் ஒருவர், மாணவர் பிரேம்குமாரிடம் தேர்வு சரியாக எழுதாதது குறித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் விஷத்தை குடிக்க முயன்றுள்ளார், உடனே ஆசிரியர்களும், மாணவர்களும் பிரேம்குமாரிடமிருந்த விஷப் பாட்டிலை பிடுங்கி எறிந்துள்ளனர்.
ஆனாலும் சிறிது விஷத்தை பிரேம்குமார் குடித்துவிட்டதால், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வாசல் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து கல்லூரிக்கு வந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தாய் வீட்டுக்கு விருந்துக்குப் போன புதுமணதம்பதி’.. ‘நீண்ட நேரமாக பூட்டியிருந்த கதவு’.. திருமணம் ஆன 3 நாளில் நடந்த சோகம்..!
- எனக்கு ‘கொரோனா’ இருக்கு... யாரும் ‘கிட்ட’ வாராதீங்க... ‘கற்களால்’ தாக்கியவர்... ‘அடுத்து’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
- புகைப்பிடிப்பதை கண்டித்த தாய்க்கு மகனால் நேர்ந்த கொடூரம்.. பயத்தில் மகன் செய்த அதிர்ச்சி காரியம்..!
- ‘நட்பாக பழகிய மாணவியிடம்’... ‘கல்லூரி மாணவர் செய்த கொடூரம்’... '6 நாட்களாக நடந்த பரிதாபம்'!
- ‘டிக்டாக் மூலம் வந்த காதல்’.. கல்யாணத்துக்கு மறுத்த காதலன்.. போலீஸ் கண்முன்னே காதலி எடுத்த விபரீத முடிவு..!
- 'பேபி உன்ன மிஸ் பண்றேன்'...'செல்ஃபி அனுப்பு'... 'அலறிய இளம் பெண்'... சென்னை வாலிபர் செய்த அட்டகாசம்!
- ‘காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி’... ‘பஸ் ஸ்டாப்பில்’... ‘இளைஞர் செய்த காரியத்தால்’... 'அதிர்ந்துபோன பொதுமக்கள்’!
- ‘கண்முன்னே’ பள்ளி ‘மாணவிக்கு’ நேர்ந்த பயங்கரம்... ‘புலம்பியபடியே’ இருந்த ‘உறவினர்’ எடுத்த ‘விபரீத’ முடிவு...
- 'தம்பி நீங்க வந்துருங்க ப்ளீஸ்'... 'பி.டெக்' மாணவனை துரத்திய வாய்ப்பு'... மாணவனின் அட்ரா சக்க பதில்!
- ‘பலமுறை’ சொல்லியும் கேட்காத பெற்றோர்... கோவையில் ‘7ஆம் வகுப்பு’ மாணவி செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...