பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு... அதிமுக பிரமுகர் உட்பட... மேலும் 3 பேரை அதிரடியாக கைது செய்த சிபிஐ!.. சிக்கியது எப்படி?.. பதறவைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோவை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர், தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் வசந்த்குமார், சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல இளம்பெண்களை ஏமாற்றி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இந்த பாலியல் கொடூர வழக்கு தமிழகத்தையே அப்போது உலுக்கியது.
இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது. சிபிஐ கடந்த ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் 3 பேர் பிடிபட்டுள்ளனர்.
அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைதான 3 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோவை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதாவது ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ கூறுகையில், பொள்ளாச்சி வழக்கில் மேலும் 2 பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறியுள்ளது.
இந்த சமூகம் பாதிக்கப்பட்ட பெண்களையே குறை கூறுவதால், ஒரு பெண், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியில் கூறுவது கடினம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நேற்று ஒரு வழக்கில் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது 2 பெண்கள் அளித்த வாக்குமூலத்தால் பொள்ளாச்சி வழக்கில் மேலும் 3 பேர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட பொள்ளாச்சி அதிமுக மாணவர் அணி செயலாளர் அருளானந்தத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ரூ.2500 பொங்கல் பரிசு... மீண்டும் அரசுக்கே திரும்ப வரும்!".. எப்படி?.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் வைரல் பதில்!!
- டெல்லியில் இருந்து வந்த வேட்பாளர் லிஸ்ட்!.. 38 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக!.. அதிமுக கூட்டணியில் யார்? எங்கே? போட்டி!
- 'சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்'... 'மீண்டும் சென்னை வருகிறார் அமித் ஷா'... சென்னை விசிட்டில் இருக்கும் அதிரடி பிளான்!
- 'பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்'... 'முதல்வர் வேட்பாளர் யார்?'... பாஜக மேலிடப் பொறுப்பாளர் அதிரடி கருத்து!
- "இடையில் புகுந்து பலன் பெறலாம் என நினைகிறார்கள்..!!!" - 'அதிரடி சவால்... ஆவேச பேச்சு'... கூட்டணி கட்சிகளுக்கும் 'எச்சரிக்கை' விடுத்த... அதிமுக தலைவர்கள்...!!!
- VIDEO: 'தந்தை பெரியார், எம்ஜிஆர் நினைவு நாள்'... கருப்பு சட்டை அணிந்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!
- “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... இல்லத்தரசிகளுக்கு அரசு சம்பளம் கொடுப்போம்...!” - அதிரடி அறிவிப்புகள் வெளியிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி! - யாரு சாமி அவங்க???
- திருமணமான பெண்கள்தான் ‘குறி’.. சிக்கிய இளைஞர்.. வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்..!
- “இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம்”.. என பிரச்சாரம் செய்த எம்ஜிஆர்!.. ஆனாலும் மக்கள் செய்தது என்ன தெரியுமா?.. 1977 தமிழக தேர்தலில் நடந்த படு சுவாரஸ்யம்!
- 'அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்கும்போது'.. திமுக தொண்டருக்கு ஏற்பட்ட விபரீதம்.. பரபரப்பான சம்பவம்!