'அதோட மதிப்பு 5 கோடி இருக்கும்...' 'குடும்பத்துல, தொழில்ல பிரச்சனை வராம இருக்க இத பண்ணி தான் ஆகணும்...' - 'சாமிக்கு பயந்து எடுத்த முடிவு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி பகுதியில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்த நபர் கடவுள் பயத்தால் தானாகவே முன்வந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் நிலத்தை ஒப்படைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பத்தூர் பொள்ளாச்சி பகுதியின் சிஞ்சுவாடி சுற்று வட்டாரத்தில் வரதராஜ பெருமாள், மாரியம்மன் மற்றும் விநாயகர் கோயில்களும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன.

இந்நிலையில் சுமார் 5 கோடி மதிப்புடைய சிஞ்சுவாடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 12.16 ஏக்கர் புஞ்சை நிலத்தை லட்சமாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். தற்போது ராஜேஷ் தானே முன் வந்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீண்டும் கோயிலுக்கு ஒப்படைக்க முன் வந்துள்ளார்.

இந்த குறிப்பிட்ட கோவில் நிலமானது சுமார் 120 ஆண்டுகளாக தன் மூதாதையர்களிடத்தில் இருந்தாகவும், அதனால் அந்நிலத்தில் தங்கள் குடும்பத்தினர் நான்கு தலைமுறையாக விவசாயம் செய்து வந்தாகவும் ராஜேஷ் கூறியுள்ளார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்ற தகவல் மூல பத்திரத்தின் வழியாக தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது தொழில் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் பாதிப்புகளுக்காக பிரசன்னம் பார்த்த போது கோயில் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்ததாகவும் அதன்படியே தானும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அறநிலையத்துறையினரிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

மேலும் ராஜேஷ் தானே முன்வந்து கோயில் நிலத்தை ஒப்படைத்ததால் அவ்வூர் மக்கள் அனைவரும் ராஜேஷை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதேபோல் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் அதை மீண்டும் நேர்மையாக ஒப்படைக்க முன்வர வேண்டுமென இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்