‘1 லட்சம் ரூபாய்’ பரிசு... ‘இத’ மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்... ‘பிரபல’ ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘மோசடி’ கும்பல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்காசியில் பிளிப்கார்ட் பெயரில் மோசடி செய்துவரும் கும்பல் குறித்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள தென்காசி போலீசார், “சமீபத்தில் இங்கு ஒருவருக்கு ஆன்லைன் சேவை நிறுவனமான பிளிப்கார்ட்டின் பெயரில் வருவது போல தபால் ஒன்று வந்துள்ளது. அதில், அவருக்கு ரூ 1 லட்சம் பரிசு விழுந்திருப்பதாகவும், சில தகவல்களை மட்டும் கொடுத்தால் உடனடியாக அந்தப் பரிசு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்துள்ளது. 

அதில், பரிசைப் பெறுவதற்கு அவருடைய வங்கிக் கணக்கு எண், ஆதார் கார்டு, பான் கார்டு பற்றிய தகவல்கள் வேண்டுமெனக் கேட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவர் எங்களிடம் இதுபற்றி புகார் அளித்தார். பின்னர் நாங்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசியபோது, அவர்கள் இதுபோல எந்தவொரு பரிசையும் நாங்கள் வழங்கவில்லை எனவும், வாடிக்கையாளர்களிடம் இதுபோன்ற தகவல்களை நாங்கள் கேட்பதில்லை எனவும் கூறினார்கள்.

இதையடுத்து இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாற வேண்டாமென பொதுமக்களை எச்சரித்து வருகிறோம். அந்த கும்பலைப் பிடிக்கவும் ரகசியமாகக் கண்காணித்து வருகிறோம். மேலும் சந்தேகப்படும்படியாக யாராவது போனிலோ, நேரிலோ இதுபோல பேசினால் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுங்கள் எனவும் மக்களிடம் கூறி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

 

 

MONEY, POLICE, FLIPKART, TENKASI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்