"சொன்னா கேக்க மாட்டீங்க?".. மளிகைக்கடையின் 'இ-எடைமெஷினை' தூக்கி போட்டு உடைத்த 'தலைமைக்காவலர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆம்பூர் அருகே மளிகை கடையில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் கடை இயந்திரத்தை தூக்கி நடு ரோட்டில் வீசிய தலைமைக் காவல் அதிகாரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே கடைகளை திறந்து வைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் உமராபாத் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் தனது மளிகை கடையை திறந்து வைத்து இருந்ததாக தெரிகிறது. இதனால் அவரிடம், “கடையை மூடச் சொல்லியும் கேட்காமல் வியாபாரம் செய்கிறாயா?” என கேட்டு உமராபாத் தலைமைக்காவலர் ரகுராமன் என்பவர் கடையிலிருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை தூக்கி நடு ரோட்டில் வீசி உடைத்தார். அவரது இந்த செயல் செல்போனில் வீடியோ பதிவாகி இணையதளத்தில் வைரலானதை அடுத்து இதுபற்றி திருப்பத்தூர் எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து திருப்பத்தூர் எஸ்.பி.விஜயகுமார் ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரம் சென்று கடை உரிமையாளர் ராஜாவுக்கு புதிய எலக்ட்ரானிக் இயந்திரத்தை வாங்கி கொடுத்தார். மேலும் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும்

ராஜாவுக்கு அறிவுரை வழங்கினார். அதேநேரத்தில் மளிகை கடை வியாபாரி ராஜாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட தலைமை காவலர் ரகுராமை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்