ஹெலிகாப்டர் விபத்து : உடல்களுடன் சென்ற அமரர் ஊர்தி.. விபத்தில் சிக்கிய பாதுகாப்பு வாகனம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்து : உடல்களுடன் சென்ற அமரர் ஊர்தி.. விபத்தில் சிக்கிய பாதுகாப்பு வாகனம்...!
Advertising
>
Advertising

அந்த சமயத்தில், பாதுகாப்புக்காக பின் தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்த போலீசார் வாகனம் வளைவில் திரும்பும்போது சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் போலீஸ் அதிகாரி உள்பட சிலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று மற்றொரு இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளது.  இதனால், விபத்து ஏற்பட்ட ஆம்புலன்ஸில் இருந்து மற்றொரு ஆம்புலன்ஸிற்கு உடலை மாற்றம் செய்து கொண்டு போயுள்ளனர்.

வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள் கொண்டு செல்லுகையில், மேட்டுப்பாளையம் அருகே சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பொதுமக்கள் வழி எங்கிலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

BIPIN RAWAT HELICOPTER ACCIDENT, பிபின் ராவத், பிபின் ராவத்தின் உடல், BIPIN RAWAT, POLICE SECURITY VEHICLE, HELICOPTER, ஹெலிகாப்டர் விபத்து, குன்னூர், பிபின் ராவத் உடல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்