10 வருஷமா பூட்டுன வீட்டுக்குள்ள தவித்த பாட்டி.. பசி தாங்க முடியாம மண்ணை தின்ற சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சாவூரில் 10 ஆண்டுகளாக வயதான மூதாட்டி ஒருவர் வீட்டுச் சிறை வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "எப்போவுமே காரமா தான் சாப்பிடுவீங்களானு கேட்டேன்".. நரிக்குறவ மக்கள் வீட்டில் சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்கள் சொன்ன பதில்.. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் வசித்துவருகிறார் மூதாட்டி ஞானஜோதி. இவருடைய கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருக்கு மாதம் ஓய்வூதியமாக 30 ஆயிரம் ரூபாய் வருகிறது. ஞான ஜோதிக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும் மூத்த மகன் சென்னையில் காவல்துறை ஆய்வாளராக பணி புரிவதாகவும் இரண்டாவது மகன் தொலைக்காட்சியில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.

வீட்டுச் சிறை

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக மூதாட்டி ஞானஜோதி விட்டுச் சிறை வைக்கப்பட்டுள்ளதாக  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து அவரது உத்தரவின் அடிப்படையில் சமுக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

விசாரணை

விமலா தலைமையிலான குழு மூதாட்டி வீட்டுச் சிறை வைக்கப்பட்டது குறித்து விசாரணையை துவங்கியது. அதன் அடிப்படையில் மூதாட்டி ஞானஜோதியின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மெலிந்து, எலும்பும் தோலுமாக காணப்பட்ட ஞானஜோதி பசி கொடுமை தாங்காமல் மண்ணை சாப்பிட்டுவந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதனை அடுத்து மூதாட்டியை மீட்க சமூக நலத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழ் பல்கலைக்கழக காவல்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் ஞானஜோதியை மீட்டு, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.

தஞ்சையில் முன்னாள் அரசு ஊழியர் ஒருவரின் மனைவி 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Also Read | குரான் வாசிச்ச அப்பறம் தான் தேரோட்டம்.. மத நல்லிணக்கத்திற்கு சாட்சி சொல்லும் பாரம்பரியம்..!

POLICE, RESCUE, OLD WOMAN, HOME, THANJAVUR, மூதாட்டி, தஞ்சை மாவட்டம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்