நடுராத்திரியில்.. டாக்டரை கட்டிபோட்டுவிட்டு அந்த கும்பல் செய்த காரியத்தை பாருங்க.. திண்டுக்கல்லில் நடந்த ஷாக்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் வீடு புகுந்து டாக்டர் தம்பதியினரை கட்டிப்போட்டு 280 பவுன் தங்க நகைகள், 25 லட்சம் பணம், இன்னொவா கார் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

திண்டுக்கல் மாவட்டத்தில்  பல்வேறு திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. பட்டப்பகலில் பெண்கள் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ செல்ல முடியவில்லை. வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகமாக உள்ளது. வீடு புகுந்து திருடிச்செல்லும் சம்பவங்கள், வழிப்பறிகள், கொள்ளை சம்பவங்களால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலை ஏற்படுகிறது. இரவில் நடக்கும் திருட்டு கொள்ளை சம்பவம் குடும்பத்தினரையே கதிகலங்க வைக்கிறது.

அச்சத்தில் தவிக்கும் மக்கள்

வெளிமாவட்டங்களை சேர்ந்த பலர், உள்ளூர் பதிவெண் கொண்ட இருசக்கர வாகனங்களில் பகலில் தெருத்தெருவாக சென்று நோட்டமிடுகின்றனர். யாரும் இல்லாத நேரத்தில்  இரவிலேயே வீடுபுகுந்து திருடிச்செல்லும் சம்பவங்கள் நகரிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் தினமும் நடக்கின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நேற்று நடந்த கொள்ளை சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முகமூடி கொள்ளையர்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-  தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் சக்திவேல் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி ராணி மற்றும் குடும்பத்தினருடன் நேற்றிரவு தங்களின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த மருத்துவர் உட்பட நான்கு பேரை கட்டி போட்டுள்ளனர். பின்பு, வீட்டினுள் பீரோவில் இருந்த 280 பவுன் தங்க நகைகள், ரூ 25 இலட்சம் பணத்தை கொள்ளை அடித்தனர்.

போலீசார் விசாரணை

மேலும், வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரையும் அந்த முகமூடி கும்பல் எடுத்து சென்றுள்ளது. இதையடுத்து, டாக்டர் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எஸ்பி சீனிவாசன் மற்றும் டிஐஜி ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடித்து சென்றவர்களை வடமாநிலத்தவரா என்ற கோணத்தில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் வீட்டில் 280 பவுன் நகை பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

DINDIGUL, DOCTOR FAMILY, OTTANCHATRAM, POLICE INVESTIGATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்