‘சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை..’ மறுவாழ்வு மையம் பற்றி வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த தலைமைக் காவலர் ஒருவர் அடித்தே கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவில் மணிவண்ணன், திவான் ஆகியோருக்கு சொந்தமான மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இங்கு பல மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்ட கடலூரைச் சேர்ந்த தலைமைக் காவலர் தமிழ்ச்செல்வன் என்பவர் கடந்த ஒன்றாம் தேதி உயிழிந்துள்ளார். அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் மறுவாழ்வு மையத்தில் போலீஸார் ஆய்வு நடத்தியுள்ளனர்.  அப்போது அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு சிகிச்சை பெற்று வரும் வெங்கடேசன், “இந்த மையத்தில் சிகிச்சை எதுவும் அளிக்கப்படுவதில்லை. சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை தான் செய்கிறார்கள்” எனத்  தெரிவித்துள்ளார். மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கு வந்த தலைமைக் காவலருக்கே இப்படி நடந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

REHAB, TRICHY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்