'திருநெல்வேலி சிமெண்ட் ஆலையில் 'சிங்கமா'?... 'பகீர் கிளப்பிய வீடியோ'... காவல்துறை அதிகாரி சொன்ன பஞ்ச் பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருநெல்வேலி அருகே சிங்கம் உலவுவதாக வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலியை அடுத்துள்ள தாழையூத்தில், இந்தியா சிமென்ட்ஸ் வளாகம் உள்ளது. இதையொட்டியே தாழையூத்து ரயில் நிலையமும் உள்ளது. இந்நிலையில் ரயில் நிலையம் அருகே மாலை நேரத்தில் சிங்கம் ஒன்று உலாவுவதாக நேற்று வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது.

வடமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு ரயில்கள் மூலம் சிங்கம் வந்திருக்கலாம் எனவும் பலரும் பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து பேசிய மாவட்ட வன அலுவலர், ''இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டுமே சிங்கம் உள்ளது. ஒருவேளை சில சிங்கங்கள் குஜராத் மாநில காட்டுப் பகுதிகளை விட்டு வெளியே சென்றாலும் பக்கத்து மாநிலங்களுக்கு தான் செல்ல வாய்ப்புள்ளது.

ரயிலில் இவ்வளவு கிலோ மீட்டர் தூரம் வர நிச்சயம் வாய்ப்பில்லை. இருப்பினும் வன ஊழியர்களைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.   மேலும் காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் அந்த பகுதியில் ஆய்வை துவங்கியுள்ளார்கள்'' எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தாழையூத்தில் சிங்கம் உலவுவதாகப் பரவிய வீடியோ வதந்தி என காவல்துறை அதிகாரி சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,

''வதந்தி பரப்பாதீர்கள்.

கடந்த இரு நாட்களாகத் திருநெல்வேலி சிமெண்ட் பாக்டரி அருகே சிங்கம் உலாவுகிறது என வாட்சப்பில் வதந்தி.

இது குஜராத் மாநில சிமெண்ட் பேக்டரி.

நெல்லையில் இருக்கும் ஓரே சிங்கம் "துரைசிங்கம்" மட்டுமே.😃

எனவே நிம்மதியாக இருங்க மக்களே!

எனத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்