திருமணத்தை மீறிய உறவு.. ஆண் நண்பருடன் வாக்குவாதம்.. பெண் வனக்காவலருக்கு நடந்த விபரீதம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணத்தை மீறிய உறவின் காரணமாக போடியில் வனக் காவல் துறையில் பணிபுரிந்துவந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

மதுரை சதாசிவம் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி மனைவி சரண்யா (27). இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்கு வருடம் முன்பு இவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். இவர்களது இரண்டு குழந்தைகளும் சரண்யாவின் பெற்றோர் வீட்டில் உள்ளனர்.

பழைய நட்பு

மதுரையில் சரண்யா வசித்துவந்த காலத்தில் காவல் துறை பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்திருக்கிறார். அப்போது, மதுரையில் வசித்துவரும் திருமுருகன் என்பவரும் சரண்யாவும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. 27 வயதான திருமுருகன் மதுரை ஆயுதப்படை காவல் பிரிவில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். பின்னர், திருமுருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இருப்பினும், திருமுருகன் போடியில் இருக்கும் சரண்யாவின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து தங்கிச் செல்வார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சரண்யாவை கொலை செய்துவிட்டதாக மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்திருக்கிறார் திருமுருகன். இதனையடுத்து கீரைத்துறை போலீஸார் தகவலின் பேரில் போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் போடியில் சரண்யா வசித்து வந்த வீட்டில் சென்று பார்த்தபோது சரண்யா கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரீதம்

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு போடி வீட்டில் தனியாக வசித்துவந்த சரண்யாவின் வீட்டில் வீட்டிற்கு திருமுருகன் வந்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் திருமணம் செய்வது தொடர்பாக பேசியபோது இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், சரண்யாவின் கழுத்தை நெரித்து திருமுருகன் கொலை செய்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போடி நகர் காவல் நிலைய போலீஸார் திருமுருகன் கைது செய்ய மதுரை விரைந்துள்ளனர். காவல்துறை அதிகாரி ஒருவர் வன காவல்துறை அதிகாரியான பெண்ணை கொலை செய்திருப்பது அவ்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAMILNADU, POLICE, தமிழ்நாடு, போலீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்