'கையில சுத்தமா பணம் இல்ல... ஊர்லயும் 'தலைகாட்ட' முடியாது... லாட்ஜில் 'உயிருக்கு' போராடிய பெண்... கடற்கரையில் சடலமாகக் கிடந்த காவலர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணத்தை மீறிய உறவால் வீட்டைவிட்டு வெளியேறிய வந்த கள்ளக்காதல் ஜோடி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கன்னியாகுமரியை அதிர வைத்துள்ளது.

கேரளா மாநில காவல்துறையில் டிரைவராக பணிபுரிந்து வந்த போஸ்(40) என்ற காவலருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்ரியா(30) என்கிற பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவிருந்துள்ளது. இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் இந்த உறவை அவர்களால் கைவிட முடியவில்லை. இதை இருவரது வீட்டிலும் கண்டித்து இருக்கின்றனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும் கணவன், மனைவி போல கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளனர்.

கடைசியாக இருவரும் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். அங்கு அறை எடுத்து தங்கிய இருவரும் கையில் பணமில்லை, ஊருக்கும் திரும்பி போக முடியாது அதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை இருவரும் தங்கியிருந்த அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டு இருக்கிறது. இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்க்க அங்கு சுப்ரியா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்திருக்கிறார்.

போஸை தேடியபோது அவர் கன்னியாகுமரி கடற்கரையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து சுப்ரியாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் இருவரும் விஷம் அருந்தியதாகவும், போஸிற்கு வாந்தி அதிகம் வந்ததால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று அவர் கடற்கரைக்கு சென்றதாகவும் சுப்ரியா தெரிவித்துள்ளார். தற்போது சுப்ரியா மற்றும் போஸ் இருவரது வீட்டிற்கும் இதுகுறித்து போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்