ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்ட இறந்தவரின் சடலம்.. திடுக்கிடும் பின்னணி.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி அருகே ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இறந்து போன நபரின் சடலம் தற்போது மீண்டும் விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் பகுதி முழுவதும் பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மகளிர் தினம்: குஜராத் - பெங்களூரு அணி போட்டியை இலவசமாக பார்க்க ஏற்பாடு.. WPL -ன் அசத்தல் முயற்சி..!

சோகம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பாஸ்கரன். 27 வயதான பாஸ்கரன் டைலராக பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி தனது நண்பர் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு பாஸ்கரன் சென்று இருக்கிறார். அதன் பிறகு வீட்டுக்கு திரும்பிய அவர் தூங்கச் சென்று இருக்கிறார். அப்போது நள்ளிரவில் திடீரென அவருக்கு உடல் வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் அடுத்த நாள் காலை மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து பாஸ்கரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்ததோடு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பாஸ்கரனுடைய மனைவி பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து பாஸ்கரனது உடல் புரத்தாகுடியில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

புகார்

இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புரத்தாகுடி கிராம மக்கள் ஒன்றிணைந்து பாஸ்கரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரை விசாரித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் இது குறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்து உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனர்.

Images are subject to © copyright to their respective owners.

பரபரப்பு

இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் முருகன் முன்னிலையில் திருச்சி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பாஸ்கர் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்விற்காக எலும்புகளை சேகரித்தனர். அப்போது சமயபுரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இறந்து ஒன்றரை வருடங்கள் ஆன பின்னர் பாஸ்கரன் என்பவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | CSK வின் ஹோலி கொண்டாட்டம்.. தல தோனியின் அன்பு வாழ்த்து.. தீயாக பரவும் வீடியோ..!

TRICHY, POLICE INVESTIGATION, MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்