“சிசிவிடியில் ஸ்ப்ரே.. சுற்றியும் மிளகாய்ப்பொடி”.. தமிழகத்தை அதிரவைத்த தஞ்சை கோயில் சிலை கொள்ளைச் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சாவூர் நகரப் பகுதியான கரந்தை ஜைன முதலி தெருவில் உள்ள, 600 ஆண்டு கால பழமையான ஆதீஸ்வரர் சமண கோவிலுக்குள் புகுந்து ஆதீஸ்வரர் சிலை, ஜினவாணி சரஸ்வதி சிலை, ஜோலமணி சிலை, நதீஸ்வரர் சிலை, பஞ்ச தந்தீஸ்வரர் சிலை, நவக்கிரக தீர்த்தங்கரர் சொலை, நவ தேவதா சிலை, 24வது தீர்த்தரங்கரர் சிலை உள்ளிட்ட பல சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

இந்த கோவிலைச் சுற்றிலும் மிளகாய்ப் பொடி தூவியும், கோவிலுக்குள் இருக்கும் 3 கேமராக்களில் 2 கேமராக்களில், பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் ஸ்பிரேயை அடித்து கேமராவின் ஆடியை மறைத்தும்,கோவிலின் பின்புறக் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து மர்ம நபர்கள் இவ்வாறு கொள்ளையடித்துள்ளனர். அந்த எஞ்சியுள்ள 3-வது கேமராவில் பதிவானதைக் கொண்டே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புகள் கொண்ட இந்த சிலைகளின் மூலம், கோயில்களில் வரலாற்றையும், பண்பாட்டையும் பொக்கிஷங்களாய் பாதுகாத்து வரும் நிலையில், இந்த சிலைகள் இப்படி மொத்தமாக களவாடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிப் பேரலைகளை உண்டுபண்ணியுள்ளது.

TANJORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்