'ஹெல்மெட் போடலன்னு சொன்னது ஒரு குத்தமா?'... 'காவல் ஆய்வாளருக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் வாகன சோதனையின்போது, காவல் ஆய்வாளரை ஆபாசமாக பேசியதாக, ரயில்வே பரிசோதகரை, போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திடீர் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட, மேல மாரட் வீதி சந்திப்பு பகுதியில், வாகன சோதனையில் காவல் ஆய்வாளர் முருகேசன் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே, ரயில்வே பரிசோதகரான குருசாமி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அவரை தடுத்து நிறுத்தி, தலைக் கவசம் அணியாததற்காக அபராதம் செலுத்தும்படி காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல் ஆய்வாளர் முருகேசனை, ரயில்வே பரிசோதகர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரயில்வே பரிசோதகர் குருசாமி மீது,  இருபிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

HELMET, MADURAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்