'ஒத்தக்கால் ஆசனா', 'தவளை ஜம்பிங்' ... ஆத்தி 'இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே' ... போலீசாரின் 'புது புது' நூதன தண்டனைகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவை மீறி பொது இடங்களில் சுற்றித் திரிந்து வருபவர்களுக்கு போலீசார் புது புது நூதன தண்டனைகளை நாள்தோறும் வழங்கி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இருப்பினும் பொது மக்கள் பலர் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் பைக்குகளில் சுற்றித் திரிகின்றனர். பணியில் இருக்கும் போலீசாரும் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றுவோருக்கு பல்வேறு தண்டனைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழக போலீசார் பல்வேறு விதமான நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இரவில் சிக்கிய மூன்று இளைஞர்களுக்கு தண்டனையாக தவளை போல தாவி சென்று தூரத்தில் நிற்கும் லாரியை தொட்டு வரச் செய்தனர். அதே போல சென்னையின் பல பகுதிகளிலும் போலீசார் புது புது தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
குமணன் சாவடி அருகே சுற்றித் திரிந்த நபர்களை பிடித்த போலீசார், வெயிலில் சிறிய தூரம் ஓடிவிட்டு வந்து வண்டியின் சாவிகளை வாங்கிச் செல்ல அறிவுறுத்தினர். திருவொற்றியூர் பகுதியில் பணியில் இருந்த போலீசாரிடம் சிக்கியவர்களுக்கு வெயிலில் கொஞ்ச நேரத்திற்கு ஒற்றைக் காலில் நிற்கும்படி தண்டனை கொடுத்து அவர்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினர்.
நாளுக்கு நாள் போலீசார் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கிய போதும் சிலர் தொடர்ந்து எந்தவித காரணமும் இல்லாமல் பொதுவெளிகளில் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நகர்ந்து நகர்ந்து ஓடும் குட்டிப்புதர்!’.. ஊரடங்கு நேரத்தில் நபர் செய்த வைரல் காரியம்.. ‘தீயாக’ பரவும் வீடியோ!
- ‘பிரசவ வலியில் துடித்த இளம் பெண்’... ‘வெகுநேரமாகியும் கிடைக்காத ஆம்புலன்ஸ்’... ‘போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் செய்த குடும்பத்தினர்’... 'நெகிழ வைத்த காவலர்கள்'!
- ‘கணுக்கால் முறிவு’!.. ‘இன்னும் 240 கிமீ இருக்கு’.. ‘எனக்கு வேற வழி தெரியல’.. ஊரடங்கால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
- 'ரோடு க்ளோஸ் பண்ணா என்ன' ... 'இதெல்லாம் எங்கள ஒண்ணும் பண்ணாது' ... எல்லைகள் கடந்து ஈர்த்த முதுமைக் காதல்!
- 'தனிமைப்படுத்தப்பட்டவங்க எந்த ஏரியால இருக்காங்கனு தெரிஞ்சுக்கணுமா? ... சென்னை மாநகராட்சியின் சூப்பர் முயற்சி!
- 'எத்தனையோ போலீஸ் பாத்துட்டோம்' ... 'ஆனா இவங்க வேற ரகம்' ... பெங்களூரு போலீசாரின் கலக்கல் விழிப்புணர்வு!
- 'பசங்களா, இங்க வாங்க அடிக்கமாட்டோம், வாங்க' ... ஒன்றாக சமைத்துச் சாப்பிட்டு ... போலீசிடம் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்!
- 'எனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கு' ... 'இருக்குற ரணகளத்துல கண்டிப்பா 'சமோசா' சாப்பிடணுமா' ... 'அவசர' எண்ணிற்கு அழைத்து அடம்பிடித்த இளைஞர்!
- 'ஊரடங்கிலும் உயர்ந்து நின்ற மனிதநேயம்' ... உயிரிழந்த ஹிந்து மத நபருக்கு ... இறுதி சடங்கு செய்த முஸ்லீம் நண்பர்கள்!
- சென்னையிலிருந்து 'அவசர' பயணம் ... குவிந்த விண்ணப்பங்கள் ... யாருக்கெல்லாம் அனுமதி? .. அதிகாரிகள் விளக்கம்