‘ஏம்மா அப்படி பண்ண’!.. வீடியோ காலில் கதறியழுத தாய்.. மனதை உருக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இரண்டு வருடங்களுக்கு முன்பு தொலைந்துபோன இளம்பெண்ணை கண்டுபிடித்த போலீசார் அவரது பெற்றோரிடம் வீடியோ காலில் பேச வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எல்லிஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (24). இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு கருமாத்தூர் பகுதியை சேர்ந்த உறவினருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019ம் ஆண்டு தனது பெற்றோரின் வீட்டுக்கு திவ்யா வந்துள்ளார்.

இதனை அடுத்து இருவரையும் சேர்ந்து வைக்கும் முயற்சியில் திவ்யாவின் பெற்றோர் ஈடுபட்டுள்ளார். இதனால் பெற்றோரிடம் கோபித்துக்குக் கொண்டு திவ்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் கடந்த 2019ம் ஆண்டு மே மாதாம் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் திவ்யாவை போலீசார் தேடிவந்துள்ளனர்.

இதற்கிடையில் மதுரை மாநகரில் நீண்ட நாட்களாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான சிறப்புப் படையினருக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து திவ்யாவின் செல்போனில் விவரங்களை சேகரித்து, அதை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது தனக்கு தெரிந்த பெண் ஒருவர் மூலமாக ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்று அங்கு ஆசிரியர் படிப்பு படித்து வருவதை கண்டிபிடுத்துள்ளார். உடனே திவ்யாவை தொடர்பு கொண்ட போலீசார் அவரை சமாதானப்படுத்தி பெற்றோரிடம் வீடியோ காலில் பேச வைத்தனர். காணாமல் போன மகளை 2 வருடத்துக்கு பிறகு பார்த்த மகிழ்ச்சியில் பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர்.

அப்போது ‘அம்மாவை விட்டு போக எப்படி மனசு வந்தது. சீக்கிரம் எங்களை பார்க்க வாம்மா’ என திவ்யாவின் தாய் கதறியழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. இந்த நிலையில் திவ்யாவை பெற்றோரிடம் சேர்க்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்