'அக்கா வேணாம்.. தங்கச்சியே போதும்!'... பணத்தாசையில் பெற்றோர்.. 7-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த 'கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் காட்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 2 மகள்கள் அங்குள்ள பள்ளியில், 7-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்களின் உறவினரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடப்பகுண்டாவைச் சேர்ந்த கோபிநாத் என்கிற 30 வயதுடைய நபருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில்,  9-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியைத் தனக்கு திருமணம் செய்துவைக்க கேட்டுள்ளார். பணக்கார மாப்பிள்ளை என்பதால், சிறுமியின் பெற்றோரும் சம்மதித்துள்ளனர்.

ஆனால் ஜாதகம் சரியில்லாததால், அக்காவுக்கு பதில் 7-ஆம் வகுப்பு பயிலும் தங்கையின் ஜாதகத்தை வைத்து பொருத்தம் பார்த்ததில், 10 பொருத்தமும் பக்காவாக இருக்க, அந்த குழந்தையை கோபிநாத்துக்கு திருமணம் செய்து வைக்க பேசியுள்ளனர்.  ஆனால் அந்த குழந்தையோ, தான் படிக்க வேண்டும் என்று அழுக, அக்குழந்தையை மிரட்டி, சித்தூர் அருகே உள்ள கோவிலில் கோபிநாத்துக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன் பின்னர் கோபிநாத், தன் மாமனார் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மாணவி கல்வி சான்றிதழ் வாங்குவதற்காக தாலியை கழட்டி வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்றபோது ஆசிரியர்களிடம் தனக்கு நடந்த கொடுமையைக் கூறியுள்ளார்.

அப்போது அதிர்ந்து போன ஆசிரியர்கள் சமூக நலத்துறை அலுவலகர்களுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் மாணவியை மீட்டதோடு, கோபிநாத், மாணவி, மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, சித்தூர் மாவட்ட எஸ்.பிக்கு வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி பரிந்துரைத்துள்ளார்.

CHILDMARRIAGE, POLICE, VELLORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்