ஹெல்மெட் வாங்கி குடுக்கவா சம்பளம் தர்றாங்க.. ஆவேச இளைஞருக்கு போலீஸ் புகட்டிய பாடம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தலைக்கவசம் உயிர்க்கவசம், நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்டை கட்டாயம் அணிய வேண்டும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர் உள்ளிட்ட வாசகங்கள் மூலம் வாகன விபத்து உயிரிழப்புகளை தவிர்க்க போக்குவரத்து துறை பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Advertising
>
Advertising

இருப்பினும் இந்த விழிப்புணர்வுகளை சிறிதும் மதிக்காமல் தலைக்கவசம் அணியாமல் தான் செல்வோம் சிலர் அபாய பயணத்தை த்ரில்லாக மேற்கொள்கின்றனர். அவ்வாறு பயணிப்போரின் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறது. இருசக்க வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அரசு உத்தரவிட்டுள்ளது.

வாகன விபத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதே தலைக்கவசம் அணியாமல் செல்வதின் விளைவுதான். பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விபத்தில் உயிரிழப்பவர்கள் பலர் தலைக்கவசம் அணியாமல் செல்வதின் அலட்சியம் தான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் ஒருவர் போலீசார் கையில் சிக்காமல் இருக்க வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதில் பெண் ஒருவர் உயிரிழந்த செய்திகளையும் காண்கிறோம். கொரோனா காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இளைஞர்களை போலீசார் கண்டிப்பான முறையில் பத்து திருக்குறள்கள் சொல்ல சொல்வது போன்ற வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், ஹெல்மெட் அணியாததால், அபராதம் விதித்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞரை போலீசார் கண்டிக்கிறார். 'முதலில் நீங்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தது தவறு. ஹெல்மெட் அணியாமல் வந்து விட்டு எங்களிடம் ஹெல்மெட் வாங்கித் தர சொல்லலாமா. நீங்கள் பேசிய முறையே தவறானது. உங்களுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுப்பதற்காகவா அரசாங்கம் சம்பளம் தருகிறது' என்று கூறுகிறார்.

இதற்கு அந்த இளைஞர் நான் பேசியது தவறுதான் இனிமேல் பேசமாட்டேன். சரி விடுங்க விடுங்க சொல்றேன்ல என்று போலீசாருடன் கெஞ்சுகிறார். இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கல்யாணம் ஆன 4 மாதத்தில் கணவனுடன் சண்டை... கோபித்துக் கொண்டு வந்த பெண்ணுக்கு ரயில் நிலையத்தில் காத்திருந்த ஷாக்

மடிப்பாக்கம் போற வழி தெரியுமா.. சென்னை இளம் பெண்ணிடம் இளைஞர் கேட்ட விதம்.. புழலுக்கு வழி சொன்ன போலீஸ்!

NOT WEARING A HELMET, TEENAGER, POLICE APOLOGIZED TO THE YOUTH, RAMANATHAPURAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்