‘ஒரு மாஸ்டர் செய்ற காரியமா இது’.. கடப்பாரையுடன் சிசிடிவில் சிக்கிய மாஸ்டர்.. அதிரவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டு வந்த கொள்ளையனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையின் முக்கிய பகுதிகளான கோயம்பேடு, அண்ணா நகர், திருமங்கலம், அரும்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கடைகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடப்பாதாக காவல் துறையினருக்கு புகார் தொடர்ந்து வந்துள்ளது. இதனை அடுத்து தொடர் கொள்ளையில் ஈடுப்படும் கொள்ளையனை பிடிக்க போலிஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

இதனை அடுத்து அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் கடந்த 25 -ம் தேதி ஷட்டர் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்ததாக போலிஸாருக்கு புகார் வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலிஸார் ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கடப்பாரையால் கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை அடித்து செல்வது வீடியோ பதிவாகியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் கொள்ளையனின் புகைப்படம் தெளிவாக தெரிந்ததால், அதனைக் கொண்டு போலிஸார் தீவிரவமாக தேடிவந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒருவர் கடப்பாரையுடன் இருப்பதைப் பார்த்து, புகைப்படத்தில் இருப்பது இவர்தானா என்பதை உறுதி செய்த போலிஸார் உடனடியாக அவரை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் இவர் ஆந்திராவைச் சேர்ந்த மார்க் (எ) சிவா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அண்ணா நகரில் உள்ள பிரபல உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வரும் சிவா, அதிகாலை வேளையில் கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். வாய் பேச முடியாத இவரின் மீது வடபழனி, அண்ணா நகர், எம்.ஜி.ஆர் நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

CHENNAI, THEFT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்