'மக்கள் அல்லாடிட்டு இருகாங்க'... 'இந்த நேரத்திலும் இத செய்ய எப்படி மனசு வருதோ'... சிக்கிய இளைஞர்கள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனாவை பயன்படுத்தி அதிலும் காசு பார்க்க முயல்வது தான் கொடுமையின் உச்சம்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் முக்கியமான மருந்தாக ரெம்டெசிவிர் கருதப்படுகிறது. இந்த மருந்து பற்றாக்குறையாக இருப்பதால், கள்ளச்சந்தைகளில் பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் புகார்கள் உள்ளன. இதைத் தடுக்கத் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூரில் சிலர் ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாகக் காவல் துறையினருக்குப் புகார் சென்றது. இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர்  தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது டான்டெக்ஸ் ரவுன்டானா அருகே சிலர் ரெம்டெசிவிர் மருந்து விற்க முயற்சி செய்வதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற 3 பேரைப் பிடித்து விசாரித்தனர். இதில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வரும் கிஷோர்குமார், இவரது நண்பர்களான கிறிஸ்டோபர், கார்த்திக்  ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதில், ''கிஷோர்குமார், தான் வேலை பார்க்கும் தனியார் மருத்துவமனையிலிருந்து இம்மருந்துகளை எடுத்து வந்து கள்ளச்சந்தையில் விற்க முயன்றுள்ளார். 7 குப்பிகளைக் கைவசம் வந்திருந்த இந்த கும்பல், ரூபாய் 1,500 மதிப்புள்ள ஒரு குப்பியினை ரூ.23,000க்கு விற்பனை செய்ய இருந்ததாக'' தெரிவித்தனர்.

ஏற்கனவே கொரோனா அச்சத்தால் மக்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தி காசு பார்க்க நினைக்கும் இதுபோன்ற நபர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மற்ற செய்திகள்