'பாலை ஊத்துனா பச்சை கலர்ல மாறிடும்.. பவர்ஃபுல் நவபாஷண சிலை'.. புதுசாக உருட்டியவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் நவபாஷாண சிலை விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது. மேலும் ஒருவரை தேடி வருவதாக காவல் துறை தெரிவித்திருக்கிறது.

Advertising
>
Advertising

மீன் பிடிக்க இப்படி ஒரு ஐடியாவா?.. சிறுவனை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. வைரல் வீடியோ..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. குறி பார்க்கும் தொழில் செய்து வரும் இவர் தன்னிடம் விசேஷ குணம் உள்ள நவபாஷாண சிலை இருப்பதாகவும் அதன் மீது பாலை ஊற்றினால் பால் பச்சை நிறத்தில் மாறிவிடும் என்றும் தனது மருமகனான அப்பா சேட் என்பவரிடத்தில் கூறி இருக்கிறார். மேலும் அந்த பாலை அருந்துபவர்கள் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழ முடியும் என்றும் பல நோய்களை போக்க கூடிய அரிய மருந்து அது எனவும் கலந்துகட்டி உள்ளார் கருப்பையா.

நவபாஷாணம்

சித்தர்களால் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நவபாஷாண சிலைகள் அதிக சக்தி வாய்ந்தவை என நம்பப்படுகிறது. 'நவ' என்றால் ஒன்பது என்று பொருள். அதேபோல 'பாஷாணம்' என்றால் விஷம் என்று அர்த்தம். அதாவது ஒன்பது வகையான விஷங்களை ஒன்றிணைத்து செய்யப்படும் சிலைகள் நவபாஷாண சிலைகள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் 4 கோவில்களில் நவபாஷாண சிலைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இரண்டினை தமிழகத்தைச் சேர்ந்த சித்தரான போகர் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

மோசடி

இந்நிலையில் தாராபுரத்தை சேர்ந்த கருப்பையா நவபாஷாண சிலையை செய்துவிட்டதாக தனது மருமகனிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் ராஜா என்பவரை சந்தித்து பேசியிருக்கிறார் கருப்பையாவின் மருமகன் அப்பா சேட்.

இதற்காக ராஜா என்பவரிடத்தில் 13 லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சக்தி வாய்ந்த நவபாஷாண சிலையை ராஜாவிடம் ஒப்படைத்திருக்கிறார் அப்பா சேட். அப்போது ராஜாவிற்கு இந்த சிலை மீது சந்தேகம் வரவே அவர் சிலையை சுரண்டி பார்த்திருக்கிறார். அப்போது சிலை மேலே பூசி இருந்த ரசாயன பூச்சு உதிர்ந்து கொட்டி உள்ளே இருந்த கற்சிலை வெளிச்சத்திற்கு வரவே ராஜா காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார்.

விஷயம் அறிந்து விரைந்து வந்த போலீசார் கையும் சிலையுமாக அப்பா சேட்டை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடி தலைமறைவான கருப்பையாவை போலீசார் தேடி வருகின்றனர். சக்தி வாய்ந்த நவபாஷான சிலையை விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறை கைது செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு வைரம் இதுவரை ஏலத்துக்கு வந்ததில்லை.. ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா.. விற்பனையாளர்களின் BP-யை எகிறவைக்கும் வெள்ளை நிற வைரம்..!

TIRUPPUR, MAN, POLICE, RARE STATUE, திருப்பூர், நவபாஷாணம், சிலைகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்