‘என்ன ரொம்ப நேரமா சத்தம் வந்துட்டே இருக்கு’!.. உடனே பைக்கை நிறுத்திய நபர்.. நூலிழையில் தப்பிய உயிர்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இருசக்கர வாகனத்துக்குள் கொம்பேறிமூக்கன் விஷப்பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், பள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிங் (வயது 36). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக கரூர் நகர பகுதியில் உள்ள கடைவீதிக்கு வந்துகொண்டு இருந்துள்ளார். காமராஜர் சிலை முன்பு வந்தபோது, அவரது இருசக்கர வாகனத்தில் ஏதோ சத்தம் வருவதுபோல உணர்ந்துள்ளார்.

இதனால் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பார்த்தபோது, வண்டிக்குள் பாம்பு ஒன்று ஊர்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள், இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் கொம்பேறிமூக்கன் என்ற விஷப்பாம்பு இருப்பதை பார்த்து லாவகமாக பிடித்தனர்.

பின்னர் அதை ஒரு சாக்கில் போட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சத்தம் கேட்டு உடனே வாகனத்தை நிறுத்தியதால் விஷப்பாம்பிடம் இருந்து நூலிழையில் கிங் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தை அறிந்து அப்பகுதியில் மக்கள் பலர் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News & Photos Credits: Vikatan

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்