இது ரொம்ப விஷம்...! 'வலையில இருந்து எடுத்தப்போ கையில ஒட்டிக்கிச்சு...' 'கையெல்லாம் பயங்கரமா அரிக்குது...' 'கண்டிப்பா எச்சரிக்கை போர்டு வச்சே ஆகணும்...' - மீனவர்கள் கோரிக்கை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஷம் மிகுந்த ஜெல்லி மீன்கள் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகுந்த விஷத்தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள் பார்ப்பதற்கு அழகாகவும், பார்ப்போரை தொடவும் வைக்கும். இம்மீன்களுடைய உருவம் மற்றும் அழகை கண்டும், இதன் விஷத்தன்மை பற்றி அறியாத ஒரு சிலர் கைகளால் அதை தொடவும் பிடிக்கவும் முயற்சிப்பர்.

இந்நிலையில் இந்த ஜெல்லி மீன்கள் தற்போது திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் காணப்படுகின்றது. இவை யாஸ் புயல் காரணமாக கடற்கரை பகுதிக்கு இவ்வகை மீன்கள் வந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாராவது தெரியாமல் கையால் தொட வாய்ப்புள்ளதாகவும் எனவே இது குறித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கேட்டு்க் கொண்டுள்ளனர்.

அதோடு சில நாட்களுக்கு முன் முத்துலிங்கம் என்ற மீனவர் விரித்த வலையில் சிக்கிய இந்த ஜெல்லி மீன் அவரது கையில் ஒட்டிக்கொண்டுள்ளது. அதனால் முத்துலிங்கம் கையில் அரிப்பு ஏற்பட்டு பின்னர் தடிப்பு ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றுள்ளார். தற்போது அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்