‘சீன அதிபருடனான சந்திப்பு முடிந்து’.. ‘டெல்லி திரும்பிய மோடி’.. ‘ட்விட்டரில் ட்ரெண்டாகும் #DontGoBackModi’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீன அதிபருடனான சந்திப்பு முடிந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இடையிலான முறைசாரா சந்திப்பு நேற்றும், இன்றும் மாமல்லபுரத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் வர்த்தகம் , முதலீடு, தீவிரவாதம், தீவிரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சனைகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். சந்திப்பு முடிந்து நேபாளம் புறப்பட்டுச் சென்ற சீன அதிபர் மாமல்லபுரம் சந்திப்புக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்த தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கோவளத்திலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். புறப்படும் முன் அவர் சென்னை கனெக்ட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், சீனாவின் மாண்டரின் ஆகிய மொழிகளில் ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாவது வழக்கம். அதன்படி நேற்றும் #GoBackModi ட்ரெண்டானது. இந்நிலையில் இன்று DontGoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இன்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து பலரும் இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து தமிழில் பேசி சீன அதிபரை மோடி வரவேற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வேஷ்டி சட்டையில் மோடி | Video: Dhoti Clad Modi Welcomes Xi JinPing at Chennai's Mamallapuram!
- ‘13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..
- ‘சாலையில் சென்ற கார்கள் மீது’.. ‘நொடியில் மேம்பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து’..
- 'ரெண்டு' நாளைக்கு... இங்க 'டோல்கேட்' கட்டணம் கெடையாது.. என்ன காரணம்?
- ‘சீன அதிபர் சென்னை வருகை’ ரயில்கள் சிறிதுநேரம் நிறுத்தப்படுவதாக தகவல்..! விவரம் உள்ளே..!
- ‘கூடப் படிக்கும் கல்லூரி மாணவரை’... ‘மற்றொரு மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'சென்னையில் பதறவைக்கும் வீடியோ காட்சிகள்'!
- ‘வீட்டிலிருந்தே வேலை செய்யுங்க’... ‘ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’!
- ‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன?’..
- பட்டப்பகலில், ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி..! சென்னை ரிச்சி தெருவில் பரபரப்பு..!