‘என்னால ஜெயிக்க முடியல.. மன்னிச்சுடுங்க’!.. உருக்கமாக பதிவிட்ட ‘தமிழக’ வீராங்கனை பவானி தேவி.. உடனே பதிலளித்த பிரதமர் மோடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டோக்கியா ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் தோல்வி பெற்ற தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி, பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவின் முதல் சுற்றில் வெற்றி பெற்று அசத்தினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் சுற்றில் உலகின் நம்பர் 3 வீராங்கனை மனான் புருனேவிடம் போராடித் தோல்வி அடைந்தார்.

முதல் சுற்றில் துனிசியா நாட்டின் நாடியா பென் அஜிசி என்பவருடன் பவானி தேவி மோதினார். இதில் 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு பவானி தேவி முன்னேறினார். இதனை அடுத்து இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மேனான் ப்ரூநெட்டுடன் மோதினார். ஆனால் ஆரம்பம் முதலே மனான் புரூனே ஆதிக்கம் செலுத்தனார். கடைசி வரை போராடிய பவானி தேவி, 7-15 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பவானி தேவி உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்,‘இது மிகப் பெரிய நாள். உற்சாகமாவும், உணர்ச்சிமிகுந்ததாகவும் இருந்தது. நான் முதல் போட்டியில் 15/3 என்ற கணக்கலில் நாடியா அஜிசியை வென்றேன். ஆனால், இரண்டாவது போட்டியில் 7/15 என்ற கணக்கில், உலகின் சிறந்த வீராங்கனை பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் மேனான் ப்ரூநெட்டிடம் தோல்வியடைந்தேன். நான் என்னுடைய பங்கை சிறப்பாகச் செய்தேன். ஆனால், வெற்றி பெற்றமுடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்’ என பவானி தேவி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘உங்களுடைய சிறப்பான ஆட்டத்தை நீங்கள் கொடுத்துள்ளீர்கள். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி. உங்களால் இந்தியா பெருமைப்படுகிறது. நம் நாட்டு மக்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம்’ என ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்