பிரதமர் மோடியை பார்க்க வந்த மாற்றுத்திறனாளி தொண்டர்.. செல்ஃபி எடுத்து பாராட்டிய பிரதமர்.. நெகிழ்ச்சி ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, மாற்றுத் திறனாளி தொண்டர் ஒருவரை சந்தித்து செல்ஃபி எடுத்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் . கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதன்பின்னர் பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி,  ஈரோட்டைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவரைச் சந்தித்துப் பேசினார். மாற்றுத் திறனாளியான மணிகண்டன் என்பவரை சந்தித்து அவருடன் செல்ஃபி  எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பு குறித்து மோடி எழுதியுள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பதிவில்,"ஒரு சிறப்பு செல்ஃபி. சென்னையில் திரு எஸ்.மணிகண்டனை சந்தித்தேன்.  அவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க பிஜேபி கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார்.அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார், மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால் - அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார். திரு.எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்.  அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது.  அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

 

MODI, PM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்