'இது யுனிஃபார்மா?'.. கணவருடன் சேர்ந்து, கட்டி வைத்து அடித்த தலைமை ஆசிரியை... மாணவனின் விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பஞ்சாபில் சக மாணவர்கள் முன்னிலையில், ஆசிரியர் தன்னை கட்டி வைத்ததால், 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை அடுத்த குர்மாயில் நகர் பகுதியைச் சேர்ந்த ப்ளஸ் 1 மாணவர் தனஞ்செய் திவாரி, பள்ளி விதிமுறைக்கு எதிராக பேண்ட் அணிந்து வந்ததால், அம்மாணவனை தலைமை ஆசிரியை சரோஜ் ஷரம் என்பவர் அறைக்கு அழைத்துச் சென்று, அம்மாணவரைக் கட்டிவைத்து பிரம்பினால் தாக்கியதாகவும், ஆசிரியையின் கணவர் பிரபு தத் என்பவரும் சேர்ந்து மாணவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய மாணவர் தனஞ்செய் திவாரி வீட்டில் தெரிவிக்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுபற்றி போலீஸாருக்கு, மாணவரின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்தபோது விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, தலைமை ஆசிரியை சரோஜ் ஷரம் மற்றும் கணவர் பிரபு தத் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியது உட்பட பல்வேறு வழக்குகளில் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விஷயம் பெரிதாகியதால், லூதியானா துணை காவல் ஆணையருக்கு இவ்வழக்கு பற்றிய சரியான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். மாணவர் தனஞ்செய் திவாரி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 93 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NOTE: Suicide is never an option for any problem. For people struggling from suicidal thoughts, here is a helpline of Sneha (Suicide Prevention) Centre - 044 2464 0050.

SCHOOLSTUDENT, TEACHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்