என்னையா அடிக்கிற?... 10-ம் வகுப்பு மாணவனால் 12-ம் வகுப்பு 'மாணவனுக்கு' நேர்ந்த விபரீதம்... தொடர் 'பதட்டத்தால்' போலீஸ் கண்காணிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் அருகேயுள்ள கண்டனமானடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் இங்கே படிக்கும் 10-ம் வகுப்பு மாணவனுக்கும், 12-ம் வகுப்பு மாணவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் 10-ம் வகுப்பு மாணவனை 12-ம் வகுப்பு மாணவர் கைநீட்டி அடித்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று மதிய உணவு இடைவேளையில் கண்டமானடி அரசு பள்ளிக்குள் புகுந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 10-ம் வகுப்பு மாணவனை அடித்த 12-ம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த இருதரப்பு மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்து வர,  இந்த சம்பவம் குறித்து அறிந்த விழுப்புரம் காவல்துறையினரும் பள்ளிக்கு சென்று, பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் 10-ம் வகுப்பு மாணவர் தன்னை அடித்த மாணவரை பழிவாங்கும் நோக்குடன் விழுப்புரத்தில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களை வரவழைத்து அவரை அடித்த விவகாரம் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பிரச்சினைக்குரிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை போலீசார் வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். எனினும் பதட்டம் தணியாததால் கண்டமானடி பகுதியில் போலீசார் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்