"எல்லோரும் விட்டுட்டு போய்ட்டாங்க.. மருத்துவ செலவுக்கு உதவி பண்ணுங்க".. பல படங்களை தயாரித்த VA துரை கண்ணீருடன் கோரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல படங்களை தயாரித்த விஏ துரை தற்போது மருத்துவ செலவுகளுக்கே கஷ்டப்பட்டு வருவதாகவும் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் உருக்கத்துடன் பேசியிருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | ஜப்பானின் டோக்கியோ அருகே பூத்துக் குலுங்கும் நீல மலர்.. வைரலாகும் வீடியோ..!
விஏ துரை
தமிழில் என்னம்மா கண்ணு, பிதாமகன் ,லவ்லி, விவரமான ஆளு, லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தயாரிப்பில் வெளியான பாபா திரைப்படத்தின் எக்சிகியூட்டிவ் புரொடியூசராகவும் இவர் பணியாற்றி உள்ளார். தமிழ் திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு படங்களை தயாரித்த விஏ துரை தற்போது விருகம்பாக்கம் பகுதியில் தனிமையில் வசித்து வருவதாகவும், மருத்துவ செலவுகளுக்கே மிகுந்த சிரமப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சிகிச்சை
தனது மனைவி மற்றும் மகளை பிரிந்து வாழும் விஏ துரைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் எஸ்பி முத்துராமன் உதவியுடன் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடையவே பின்னர் விஜயா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது எழுந்து அமரும் நிலைக்கு உடல் நிலை தேறியிருப்பதாகவும் இருப்பினும்அவருடைய கால்களில் காயங்கள் இருப்பதாகவும் அவருடைய நண்பர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவருடைய நண்பர் வெளியிட்ட வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
உதவி
விருகம்பாக்கம் பகுதியில் வீடு ஒன்றில் நண்பர்களின் உதவியுடன் வசித்துவரும் விஏ துரை தனது நிலையை கருத்தில்கொண்டு உதவி செய்யும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அதில் பேசும் விஏ துரை,"வணக்கம் சார். உங்க கிட்ட பேசுற சந்தர்ப்பத்தை குமார் சார் ஏற்படுத்தி கொடுத்தாங்க. எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் 4,5 மாதமாக மருத்துவமனையில் வைத்தியம் பார்த்து இப்போது வீட்டில் இருக்கிறேன். என்னால் நடக்க முடியவில்லை சார். கால் முழுவதும் காயங்கள் இருக்கின்றன. சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு கூட என்னிடம் வசதிகள் இல்லை. எல்லோரும் என்னை விட்டுப் போய் விட்டார்கள். சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எனக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவியை செய்யுங்கள் சார்" என்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
தொடர்ந்து ரஜினிகாந்திற்கு தன்னை மிகவும் பிடிக்கும் எனவும் 40 வருடங்களுக்கு மேலாக இருவரும் நண்பர்கள் எனவும் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார் விஏ துரை. இந்நிலையில் இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்