தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, அம்மா பேட்ரோல் என்ற பெயரில், பிங்க் நிற புதிய ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு மாவட்டம் தோறும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மகளிர் காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் இந்த பிரிவே விசாரிக்கும் என காவல்துறை தெரிவித்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய, மாநில அரசு இணைந்து இந்த பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் நிற ரோந்து வாகனத்தை உருவாக்கியுள்ளனர்.
இதில் குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் எண் 1098, மற்றும் பெண்களுக்கான ஹெல்ப்லைன் எண் 1091 ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். முதற்கட்டமாக, சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையத்திற்கு 35 ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட உள்ளன. அடுத்த வாரம் இந்த ரோந்து வாகனங்களை ஒப்படைக்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் , அதேபோன்று வயதானவர்களுக்கும் உதவவும் இந்த ரோந்து வாகனம் பயன்பட உள்ளது. விரைவில் இந்த திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையங்கள் அனைத்திற்கும், ரோந்து வாகனங்கள் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தத் திட்டம் கேரள மாநிலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஊருக்குப் போன நம்மள பிரிச்சிருவாங்க’... ‘போலீஸ் வாகனத்தில் விபரீத முடிவு'!
- ‘தமிழகத்தில் முக்கிய இடங்களில்’... ‘பாதுகாப்பு அதிகரிப்பு’... காரணம் இதுதான்!
- ‘கோமா நோயாளிக்கு படுக்கையில் நடந்த பயங்கரம்..’ மருத்துவமனை ஊழியர்களின் பதிலால் அதிர்ந்துபோன தந்தை..
- 30 கிராம் எடைகொண்ட ‘நீர்’ செயற்கைக்கோள்..! அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்..!
- ‘இனி இவங்களுக்கும் 9 மாத விடுப்பு உண்டு’... 'தமிழக அரசு அதிரடி அறிவிப்பு'!
- ‘உரசிச் சென்ற அரசுப்பேருந்து..’ தடுமாறி விழுந்த இளைஞருக்கு.. ‘அடுத்த நொடி நடந்த பயங்கரம்..’
- ‘அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் இது ஃப்ரீ’.. தமிழக அரசு அசத்தல்..!
- ‘பொன்.மாணிக்கவேலின் அடுத்த அதிரடி..’ சிலைக்கடத்தலில் முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பு..
- 'அடுத்த 3 நாள்களுக்கு வாய்ப்பு இருக்கு'... 'வானிலை மையம் அறிவிப்பு'!
- ‘இப்படி எல்லாம் கூடவா பண்ணுவாங்க..?’ அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..