வெளிய ஒண்ணுமே தெரியாது...! 'கருப்பா ஆயிடும்...' ஹெலிகாப்டர் உள்ளே 'என்ன' நடந்துருக்கும்...? - ஷாக் தகவல்களை பகிர்ந்த பைலட் அசோகன்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர். ஒரு ஆண் மட்டும் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து இந்திய விமானப் படை நேற்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், ''துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பைலட் அசோகன் Behindwoods-க்கு அளித்த நேர்காணலில் ஹெலிகாப்டருக்குள் நடக்க சாத்தியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்த mi-17v5 ரக ஹெலிகாப்டர் அதி நவீன வசதிகளுடன் ரஷ்யாவில் வாங்கப்பட்ட விமானம் ஆகும். இதற்குள் சக்தி வாய்ந்த இரண்டு இஞ்சின்கள் காணப்படுகிறது.
மேலும், குன்னூர் மலைப்பகுதியில் பயணம் செய்த காரணத்தினால் திடீரென்று மூடுபனி உருவாக வாய்ப்பு அதிகம். பெரும்பான்மையான ஹெலிகாப்டர் விபத்துகள் மலைப்பகுதிகளில் நடப்பது அதனால் தான். மூடுபனி வருகிறபோது, ஹெலிகாப்டர் எப்படி பயணிக்கிறது என்பதை அறிய முடியாமல் வெளியே கருப்பு நிறமாக மாறி எதையும் காண முடியாமல் போகும். அதுமட்டுமல்லாமல் மூடுபனியினால் ஹெலிகாப்டர் எந்த கோணத்தில் பறக்கிறது என்பதனை அறிய முடியாது. விமானம் என்றால் அதனை நேராக நிமிர்த்த முடியும். ஹெலிகாப்டரில் அதை தெரிந்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும், ஹெலிகாப்டரை பொறுத்தவரைக்கும் விமானம் போல் அல்லாமல் இஞ்சின்கள் செயலிழந்து போயிருந்தால் கூட auto rotaion மூலமாக பாதுகாப்பாக தரையிறக்க முடிந்திருக்கும். எனவே இஞ்சின் பெயிலியரால் ஹெலிகாப்டர் வெடித்திருக்க வாய்ப்பு குறைவு தான். மேலும் விமானத்தை போன்று இந்த ஹெலிகாப்டரினுள் பிளேக் பாக்ஸ் உள்ளது. எனவே அது கிடைத்த பின்பு உள்ளே என்ன நடந்தது என்பது தெளிவாக அறிய முடியும்.
மற்ற செய்திகள்