சாலையின் குறுக்கே வந்த பன்றி... நிலைதடுமாறிய பைக்..!- பதற வைக்கும் காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாலையில் திடீரென குறுக்கே வந்த பன்றியால் பைக் ஒன்று நிலை தடுமாறி அதன் ஓட்டுநர் சாலையில் உருண்டு விழுந்தார்.

சாலையின் குறுக்கே வந்த பன்றி... நிலைதடுமாறிய பைக்..!- பதற வைக்கும் காட்சிகள்!
Advertising
>
Advertising

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் ஒரு நபர் பயணித்துக்  கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையின் நடுவே நுழைந்த பன்றியால் அந்த இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

pig suddenly crossing the road results in the fall of a biker

சாலையில் குறுக்கே புகுந்த பன்றி வேகமாக ஓடிவிட்டது. ஆனால், இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதால் அதை ஓட்டி வந்த நபர் பைக் உடன் உருண்டு சென்று சாலையில் விழுந்தார். பிரதான சாலை ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட வேலைக்காகப் பயன்படுத்தும் சாலையில் பன்றின் ஒன்று நடுவில் புகுந்து விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

pig suddenly crossing the road results in the fall of a biker

அந்த பைக்கில் வந்த நபரும் தலையில் ஹெல்மெட் அணியாமல் ஓட்டி வந்துள்ளார். சாலையில் அவர் பன்றியின் மீது மோதி விழும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பைக்கில் இருந்து விழுந்த நபரை சக பைக் ஓட்டிகள் தூக்கிவிட்டனர்.

பைக்கில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சமுக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், கால்நடைகளால் தமிழ்நாடு எங்கும் தொடரும் விபத்துகள் தொடர்பாகவும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் நகராட்சியாக அறிவிக்கப்பட்டு நாளாகிவிட்டது. இந்த சூழலில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மாடுகள், நாய்கள், பன்றிகளால் தொடர்ந்து இதுபோன்ற சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. திடீர் விபத்துகள் தவிர்க்க முடியாது என்றாலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் நிச்சயமாக ஹெல்மெட் அணிந்து வெளியில் செல்வதை உறுதிபடுத்த வேண்டும்.

ACCIDENT, BIKER, PIG CAUSING ACCIDENT, BIKE ACCIDENT, சாலையில் பன்றி, பைக் விபத்து

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்