‘18 வயசு நிரம்பாதவர்களுக்கு பெட்ரோல் நிரப்பப்படாது’.. பெட்ரோல் பங்க் எடுத்த அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலை விபத்துக்களைத் தடுக்கும் விதமாக புதிய முயற்சியை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியுள்ள பெட்ரோல் பங்க் உழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டினத்தில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க்கில் 18 வயது நிரம்பாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பங்க்கில் பெட்ரோல் நிரப்பவரும் வாகன ஓட்டிகளிடம் 18 வயது பூர்த்தியடைந்தவரா என கண்டறிவதற்காக ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை என ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கேட்டு வாங்கி சரிப்பார்த்த பின்புதான் பெட்ரோல் போடப்படுகிறது.
இந்த பெட்ரோல் பங்க்கில் 18 வயது நிரம்பாதவர்களுக்கு பெட்ரோல் வழங்காமல் உரிய ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வருகின்றனர். இதன் மூலம் சாலை விபத்துக்களை தடுக்கலாம் என்று அந்த பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாலை விபத்துக்களைத் தடுக்கும் விதமாக இந்த பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் எடுத்துள்ள புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்