'உதவி செய்வதுபோல் நடந்துக் கொண்ட நபரால்'... 'சென்னையில் முதியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த முதியவரை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி அயோத்தியா நகரைச் சேர்ந்தவர் 62 வயதான முதியவர் ராஜேந்திரன். இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 10-ம் தேதி திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்ற இவர், தனது கனரா வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றார்.
அப்போது முதியவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர், பணம் எடுத்து கொடுக்க உதவி செய்வதாக கூறியுள்ளார். பணம் எடுத்தப் பின்னர், தான் வைத்திருந்த போலி ஏடிஎம் கார்டை ராஜேந்திரனிடம் மாற்றி கொடுத்துவிட்டு அந்த நபர் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1.13 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேந்திரன் உடனே ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். முதியவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், ஏடிஎம் மையத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து நூதனமாக திருடிய நபரை தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பொள்ளாச்சிக்கு இதுக்காகத் தான் வந்தேன்’... ‘கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது’... ‘பி.டெக்., எம்.பி.ஏ. படித்த இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’!
- ‘குடிபோதையில்’ கொலை செய்துவிட்டு... ஆணின் ‘சடலத்துடன்’... ‘நண்பர்கள்’ சேர்ந்து செய்த ‘உறையவைக்கும்’ காரியம்...
- ‘ஒட்டுமொத்த’ குடும்பத்திற்கும் ‘அடுத்தடுத்து’ நேர்ந்த கொடூரம்... கடிதத்தில் இருந்த ‘உறையவைக்கும்’ காரணம்... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...
- 'கட்டு கட்டாக 'ஏ.டி.எம் மெஷினில்' இருந்த பணம்'... 'பூட்ட மறந்த ஊழியர்'... இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
- ‘இந்த 2 வருஷத்துல மட்டும் ரூ.547 கோடி!’.. ‘உங்க அனுமதியே தேவையில்ல!’.. ‘மிரட்டும் டெபிட் கார்டு, ஏடிஎம், நெட் பேங்கிங் மோசடிகள்’!
- ‘மெசேஜை’ பார்த்து ‘பதறிப்போய்’ புகார் கொடுத்த பெண்... ‘54 வழக்குகளில்’ தேடப்பட்ட கும்பல்... ‘ஆடம்பர’ வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்துவந்த காரியம்...
- ‘இது 651-வது வைரஸ்’!.. ‘ATM மெஷின்ல இருந்துகூட கொரோனா பரவும்’.. புது தகவல் கொடுத்த வல்லுநர்..!
- 'நீங்க போங்க' ... 'நானே எடுத்துக்குறேன்' ... பணம் எடுத்ததாக வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்த பெண்
- ‘ஏடிஎம் கார்டு மேலே பத்னாரு நம்பர் சொல்லுங்கேமா’.. தமிழ்நாட்டை டார்கெட் பண்ணி வேலைபார்த்த ஸ்பெஷல் டீம் இதான்!
- 'கவலை படாதீங்க, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்...' ஆமா, நான் அமெரிக்கா ஆபீசர் தான்...' 'ஃபர்ஸ்ட் நான் சொல்ற அமவுண்ட் அனுப்புங்க...' பேஸ்புக் வழியாக நடந்த மோசடி...!