"இளமையே போச்சு.." சிறை வாசம் அனுபவித்தும் சிரித்த முகத்துடன் பேசிய பேரறிவாளன்.. வைரலாகும் 'Throwback' வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து, சிறப்பு அதிகராத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

Advertising
>
Advertising

கடந்த 1991 ஆம் ஆண்டு, பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, பேரறிவாளன் மீது பேட்டரிகள் வாங்கி கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, மொத்தம் 25 பேருக்கு உட்சபட்ச தண்டனை விதித்து தீர்ப்பளித்தது கீழமை நீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் உட்சபட்ச தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை

இதனையடுத்து, தனக்கு விடுதலை அளிக்கவேண்டும் என பேரறிவாளன் 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார். மேலும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் விசாரணை நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், மற்றும் பிஆர் கவாய் அடங்கிய அமர்வில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பேரறிவாளனின் விடுதலை தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததையடுத்து, கடந்த 11ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனிடையே, பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர். இதன் காரணமாக, 31 ஆண்டு சிறைவாசம் முடிந்து விடுதலை பெற்றுள்ளார் பேரறிவாளன்.

அரசியல் தலைவர்கள் கருத்து

உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதாகவும் அதனால் உச்ச நீதிமன்றமே இந்த தீர்ப்பை வழங்குவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். முப்பது ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் குறித்து, அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். தனது தாய் பட்ட கஷ்டம் குறித்தும், பேரறிவாளன் விடுதலை ஆன பின் உருக்கமாக பேசி இருந்தார்.

Throwback Video

இந்நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்கு  முன், சிறையில் இருந்த பேரறிவாளன் பேசி இருந்த வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இதில் பேசும் பேரறிவாளன், தவறாக நீதி இழைக்கப்பட்டது என்றும், இளமை பருவத்தையும் வயதையும் இழந்து விட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, சிறையை இன்னொரு கிராமம் என குறிப்பிட்ட பேரறிவாளன், சிரித்த முகத்துடன் பேசி இருந்த இந்த வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

PERARIVALAN, THROWBACK, பேரறிவாளன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்