Perarasu : “ஒரு ஊர்ல ஒரு நாத்திகன் இருந்தான்”.. பேரரசு சொன்ன வைரல் குட்டிக்கதை.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இயக்குநர் பேரரசு, ஸ்ரீ சபரி ஐயப்பன் திரைப்பட விழாவில் பேசியுள்ளார். இந்த பேச்சு இப்போது வைரலாகி வருகிறது.இதில் பேசிய இயக்குநர் பேரரசு,  “திருத்தணியில் இருந்து எடுத்து வந்த விபூதி கொடுத்தார்கள். அதற்கு நிகராக எந்த சால்வையும் கிடையாது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் ஏன் இவ்வளவு கூட்டம் என்றால், இது ஆன்மீக பூமி.

Advertising
>
Advertising

Also Read | திருமணமான அன்றே கணவரை பற்றி தெரியவந்த பரபரப்பு உண்மை.! அதே நாளில் கொழுந்தனை 2வது திருமணம் செய்த இளம்பெண்..!

இந்த தமிழ்நாடு தெய்வங்கள் நடமாடிய புனித மண். இந்த தமிழ்நாட்டில் தமிழராக பிறந்து வாழ்வதே பெரிய விசயம். ஒவ்வொரு மதத்திலும் ஒரு இறை தூதர்கள் இருப்பார்கள். இந்து மதத்தில் ஆயிரக்கணக்கான இறை தூதர்கள்.ஒஔவையார், அகத்தியர், திருமூலர், சித்தர்கள் என எண்ணிலடங்கா இறை தூதர்கள். சமீப காலமாக பக்தி படமில்லை, குடும்ப படங்களே காணோம். அந்த வகையில் ஸ்ரீ சபரி ஐயப்பன் எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள். இந்த படத்தை பல ஐயப்ப பக்தர்கள் சேர்ந்து தயாரித்துள்ளார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தெய்வம் குறித்த கருத்து இருக்கும். ராமர், அல்லா, இயேசு யாராவது ஒரு தெய்வம் இருப்பதாகவும், வெற தெய்வம் இருப்பதாக வேறு சிலரும் முரண்கொள்ளுவர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான், சாமியே இல்லை என்று சொல்லக்கூடிய நாத்திகர்கள் இருக்காங்க.

கோயில்ல அர்ச்சகர் ஒருவர் காலையில் இருந்து 24 மணி நேரமும் கோவிலில் சாமிக்கு அர்ச்சனை பண்ணுவார். இதே தான் முழு நேர பணி. அவரிடம் நாத்திகர் ஒருவர் சென்று,  ‘திருப்பதி வந்தால் திருப்பம்னு சொல்றீங்க, திருவண்ணாமலைக்கு கிரிவலம் போனா மாற்றம் நடக்கும்ங்குறீங்க, மதுரை மீனாட்சி அம்மனை கும்பிட்டா உயர்வு வரும்ங்குறீங்க. இப்படி நாங்க எப்பவோ ஒருமுறை போய் சாமி தரிசனம் செய்தால் வாழ்வில் உயர்வு உண்டாகும் எனும்போது நீங்க கோயிலிலேயே இருக்கீங்களா? ஆனால் அப்படியே இருக்கீங்களே?’ என ஒரு நாத்திகர் ஒரு அர்ச்சகரிடம் கேட்டார்.

அதற்கு அந்த நாத்திகர் சொன்னது, இந்த கேள்வி நியாயம் தான். எங்க வாழ்க்கை இப்படியே தான் இருக்கும். இதுக்கு காரணம், நாங்க போன ஜென்மத்துல உன்னை மாதிரி நாத்திகம் பேசுன ஆளுங்க. போன ஜென்மத்துல உன்னை மாதிரி நாங்கள் கடவுள் இல்லைனு சொன்னோம். அதனால இந்த ஜென்மத்துல ஆண்டவன் அவரது காலடியில உட்கார வெச்சிட்டாரு. நீயும் பார்த்துக்கப்பா. ரொம்ப பேசுனா நீயும் அடுத்த ஜென்மத்துல அவர் காலடியில இருப்பனு சொன்னாரு!” என இயக்குநர் பேரரசு பேசினார்.

Also Read | “என் பொண்ணு இனி இல்ல”.. தலை முழுகிய கோலத்தில் ஜேசுரதி பகிர்ந்த பரபரப்பு ஃபோட்டோ..!

PERARASU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்