திருடி முடிச்சிட்டு கெளம்புறப்போ.. திருடன் பாத்த விஷயம்.. "இத எப்படி பாஸ் கவனிக்காம விட்டோம்".. சிசிடிவி காட்சி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த திருட்டு தொடர்பாக தற்போது  வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகள் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இளம் மகனை விபத்தில் பறிகொடுத்த அதிர்ச்சியில் பெற்றோர் எடுத்த முடிவு.! கோவையை உலுக்கிய சோகம்..

பெரம்பலூர் மாவட்டம், ஆண்டி குரும்பலூர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையர்கள் திருட முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த கிராமத்தில் தர்மராஜ் செல்வி தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். தர்மராஜ் ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இரவு நேர பணிக்கு தர்மராஜ் சென்றிருந்த நிலையில், செல்வியும் அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கும் சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், வீட்டில் யாரும் இல்லை என்பதை முன்பே அறிந்து கொண்ட நான்கு பேர் கொண்ட குழு ஒன்று இரவில் தர்மராஜ் வீட்டில் திருடவும் முடிவு செய்துள்ளனர்.

தர்மராஜ் வீட்டின் பின்பக்க கதவை உடைத்த இந்த கொள்ளை கும்பல், உள்ளே புகுந்து 5 சவரன் நகை, தையல் மிசின் உள்ளிட்ட பல வீட்டு உபயோக பொருட்களையும் அவர்கள் திருடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், வெளியே வந்த திருடர்களில் ஒருவருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.

தர்மராஜ் வீட்டில் இருந்து அனைத்தையும் திருடி விட்டு வெளியே வந்த கும்பல், அங்கே சிசிடிவி கேமரா இருப்பதை அப்போது தான் கவனித்து அரண்டும் போயுள்ளனர். ஒருவர் முதலில் கவனித்து மற்றவர்களிடம் தெரியப்படுத்தி உள்ளார். சிலர் அதை பார்த்து சிரித்துள்ள நிலையில், சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பித்தும் சென்றுள்ளனர்.

முன்னதாக, திருடர்கள் வந்த போது பதிவாகி இருந்த காட்சிகளும் பதிவானதால் அதன் அடிப்படையில் புகார் ஒன்றை தர்மராஜ் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். தொடர்ந்து, சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

திருடி முடித்த பின் சிசிடிவி இருப்பதை அறிந்து திருடர்கள் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான காட்சிகள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | மகளின் சமாதி அருகே.. அவரின் காதலனுக்கும் சமாதி கட்டிய தந்தை.. நடுங்க வைத்த பின்னணி

PERAMBALUR, ROBBERS, CCTV, HOUSE, STOLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்